முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த முயற்சியை கைவிடுகிறது அமெரிக்கா?

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      உலகம்
Trump-Zelensky 2024-11-16

Source: provided

பாரிஸ் : ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தெளிவாக தெரியாவிட்டால் அடுத்த சில நாட்களில், இதற்கான மத்தியஸ்த முயற்சியில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விலகிவிடுவார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐரோப்பிய, உக்ரேனிய தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய மார்கோ ரூபியோ, “இந்த முயற்சியை வாரக்கணக்கிலோ, மாதக்கணக்கிலோ தொடர நாங்கள் விரும்பவில்லை. நாம் இப்போது மிக விரைவாக தீர்மானிக்க வேண்டும். அடுத்த சில வாரங்களுக்குள் இது சாத்தியமாகுமா இல்லையா என்பது குறித்து சில நாட்களில் நான் பேசுகிறேன். அதிபர் ட்ரம்ப், இவ்விஷயத்தில் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளார். ஏனெனில், இதற்காக அவர் நிறைய நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணித்துள்ளார். இது முக்கியமானது. என்றாலும், இதே அளவுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய பல முக்கியமான விஷயங்கள் உள்ளன.

அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பாதுகாப்பு உத்தரவாதங்களை உறுதி செய்வது நம் முன் உள்ள ஒரு பிரச்சினை. அதேநேரத்தில், இது சாத்தியமாகுமா என்பதை நாம் குறுகிய காலத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும். இந்த சவாலும் நம் முன் உள்ளது. ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டுவது கடினம் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், அது விரைவில் செய்யப்படுவதற்கான அறிகுறிகள் இருக்க வேண்டும். இதை 12 மணி நேரத்தில் செய்து முடிக்க முடியும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், அது எவ்வளவு தூரம் வித்தியாசமாக இருக்கிறது என்பதையும், அந்த வேறுபாடுகளைக் குறைக்க முடியுமா என்பதையும் நாங்கள் பார்க்க விரும்புகிறோம். என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து