முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிவேக 1000 ரன்கள்: படிதார் புதிய சாதனை

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      விளையாட்டு      தேர்தல்
Punjab-team 2025-03-26

Source: provided

பெங்களூரு : ஐ.பி.எல். தொடரில் அதிவேகமாக 1,000 ரன்களை கடந்த  இந்திய வீரர்கள்  வீரர்கள் பட்டியலில் சச்சினை (31 இன்னிங்ஸ்) முந்தி  படிதார் (30 இன்னிங்ஸ்) 2வது இடம் பிடித்துள்ளார்.

ஓவர்கள் குறைப்பு...

ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 14 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்த்து.

பஞ்சாப் வெற்றி...

பெங்களூரு தரப்பில் டிம் டேவிட் 50 ரன் எடுத்தார். தொடர்ந்து 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் 12.1 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 33 ரன் எடுத்தார்.

படிதார் 1,008 ரன்கள்... 

இந்த ஆட்டத்தில் பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் 18 பந்தில் 23 ரன் எடுத்து அவுட் ஆனார். இந்த ரன்களையும் சேர்த்து (23 ரன்கள்) ஐ.பி.எல் தொடரில் படிதாரின் ரன் 1,000-ஐ கடந்தது. அவர் இதுவரை 34 போட்டிகளில் ஆடி 30 இன்னிங்சில் களம் இறங்கி 1,008 ரன்கள் அடித்துள்ளார்.

சச்சினை பின்னுக்கு தள்ளி...

இந்நிலையில், அவர் சாதனை பட்டியல் ஒன்றில் சச்சினை பின்னுக்கு தள்ளி 2வது இடம் பிடித்துள்ளார். அதாவது, ஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் அடிப்படையில் அதிவேகமாக 1,000 ரன்களை கடந்த (இந்திய வீரர்கள் மட்டும்) வீரர்கள் பட்டியலில் சச்சினை (31 இன்னிங்ஸ்) பின்னுக்கு தள்ளி படிதார் (30 இன்னிங்ஸ்) 2வது இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் குஜராத் அணிக்காக ஆடி வரும் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் (25 இன்னிங்ஸ்) முதல் இடத்தில் உள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து