எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 18-வது சீசனை முன்னிட்டு, பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோருக்கு 18 தொடர்ச்சியான ஐ.பி.எல். சீசன்களில் விளையாடியதற்காகவும், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர்களின் பங்களிப்பிற்காகவும் சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார். இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள ஒரு பகுதியை ரோகித் சர்மாவின் பெயர் சூட்டப்படுகிறது.
இது குறித்து ரோகித் கூறியதாவது:- இப்படி ஒன்று நடக்கும் என்று நான் என் கனவில் கூட நினைத்தது கிடையாது. தற்போது என்னுடைய பெயர் இங்கு சூட்டப்படுவது நம்ப முடியவில்லை. என் பெயர் உள்ள ஸ்டேண்ட் முன் நான் விளையாட போகிறேன் என்று நினைத்துப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. வான்கடே மைதானம் புதிதாக புனரமைக்கப்பட்ட பின் இங்குதான் நாம் உலக கோப்பையை வென்றோம். தற்போது இந்த மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டில் எனது பெயர் இருக்கிறது என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
______________________________________________________________________________________________
100-வது போட்டியில் ராகுல் தெவாதியா
குஜராத் டைட்டன்ஸ் வீரர் ராகுல் தெவாதியா தனது 100ஆவது ஐ.பி.எல். போட்டியில் டில்லி கேபிடல்ஸுக்கு எதிராக விளையாடினார். ஹரியானாவைச் சேர்ந்த ராகுல் தெவாதியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2014ஆம் ஆண்டு அறிமுகமானார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 2022 முதல் விளையாடி வருகிறார். ஆல்-ரவுண்டரான ராகுல் தெவாதியா 99 ஐ.பி.எல். போட்டிகளில் 1,043 ரன்கள், 32 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள், கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் என அடித்து போட்டியை வென்று கொடுத்துள்ளார். சிறந்த பினிஷராக அறியப்பட்டு வரும் ராகுல் தெவாதியா சமீபகாலங்களில் சுமாராகவே விளையாடி வருகிறார். குஜராத் டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருக்கிறது. ராகுல் தெவாதியாவின் 100ஆவது போட்டிக்காக ஐ.பி.எல். சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
______________________________________________________________________________________________
கம்மின்ஸ் பதிவால் ரசிகர்கள் குழப்பம்
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு பிறகு ஐதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்சின் மனைவி ரெபேக்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெபேக்கா விமான நிலையத்தில் தனது லக்கெஜ் பெட்டிகளுடன் கம்மின்சும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதில் 'குட்பை இந்தியா, இந்த அழகான நாட்டைப் பார்வையிடுவதை நாங்கள் மிகவும் விரும்பினோம்' என்று பதிவிட்டுள்ளார். இதனால் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் விலகிவிட்டாரா? என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
______________________________________________________________________________________________
இங்கிலாந்து கால்பந்து வீரர் மரணம்
இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் ஜோ தாம்சன், அங்குள்ள ரோச்டாலே, கார்லிஸ்லே யுனைடெட், சவுத் போர்ட், பரி உள்ளிட்ட கிளப்புகளுக்காக விளையாடியுள்ளார். 36 வயதான் தாம்சன் நடுகள வீரராக 225 ஆட்டங்களில் 23 கோல்கள் அடித்துள்ளார். சர்வதேச போட்டியில் ஆடியதில்லை.
இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தாம்சனின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவரது விருப்பப்படியே அவரது இல்லத்தில் குடும்பத்தினர் சுற்றி இருக்க உயிர் பிரிந்தது.
______________________________________________________________________________________________
டெல்லியை பின்னுக்கு தள்ளிய ஆர்.சி.பி
ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் ஆர்.சி.பி. அணி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் ஹோம் மைதானத்தில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை ஆர்.சி.பி படைத்துள்ளது. இதற்கு முன்னர் இந்தப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த டெல்லி அணி (45 தோல்வி, டெல்லி மைதானம்) இருந்தது.
______________________________________________________________________________________________
ஐ.பி.எல். தொடரில் டேவிட் சாதனை
ஐ.பி.எல். தொடரின் போட்டி ஒன்றில் முதலில் விளையாடிய ஆர்.சி.பி. 42 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 26 பந்தில் 50 ரன்கள் விளாசினார். இதனால் ஆர்.சி.பி. அணி 14 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது தோல்வியடைந்த ஆர்.சி.பி. அணி வீரர் டிம் டேவிட்டுக்கு வழங்கப்பட்டது.
இதன்மூலம் தோல்வியடைந்த அணியின் இருந்து ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை டிம் டேவிட் படைத்துள்ளார். மேலும் முதல் இன்னிங்சில் மிகக் குறைந்த ரன்கள் குவித்த அணியில் அரை சதம் எடுத்த வீரர்கள் பட்டியலில் டிம் டேவிட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு
04 Nov 2025கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-11-2025.
04 Nov 2025 -
சி.பி.எஸ்.இ. 10 - ம் வகுப்புத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
04 Nov 2025சென்னை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
-
மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்
04 Nov 2025சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல் 6 பேர் பலி - மீட்புப்பணி தீவிரம்
04 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
04 Nov 2025பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா: மாதம்பட்டி ரங்கராஜ்
04 Nov 2025சென்னை: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
04 Nov 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
-
மணிப்பூரில 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
04 Nov 2025இம்பால், மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
சபரிமலையில் 16-ம் தேதி நடை திறப்பு
04 Nov 2025திருவனந்தபுரம், சபரிமலையில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
-
160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா
04 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க.விடம் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்: மனோஜ் பாண்டியன் மீது வைகைச் செல்வன் தாக்கு
04 Nov 2025சென்னை, நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
-
திருப்பூரில் பரபரப்பு சம்பவம்: நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து
04 Nov 2025திருப்பூர்: திருப்பூரில் நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
04 Nov 2025ஈரோடு, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.
-
என்னை சீண்ட வேண்டாம்: அன்புமணிக்கு அருள் எம்.எல்.ஏ. எச்சரிக்கை
04 Nov 2025சேலம், அன்புமணி பற்றிய பல உண்மைகள் தெரியும் என்று தெரிவித்துள்ள பா.ம.க. எம்.எல்.ஏ.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் ஆஜர்
04 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் நேரில் ஆஜராகினர்.
-
த.வெ.க.வில் 2,827 பேருக்கு பொறுப்பு
04 Nov 2025சென்னை: 2,827 த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் பொறுப்புகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-
அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
04 Nov 2025புதுடெல்லி: பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
04 Nov 2025மேட்டூர்: டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருநது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
-
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30 ஆயிரம் நிதி - தேஜஸ்வி யாதவ் உறுதி
04 Nov 2025பாட்னா, இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதி வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார்.
-
சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி: பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை என்ன?
04 Nov 2025சென்னை: சிறப்பு வாக்காளர் திருத்தப்பணியின் போது பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
04 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியது
04 Nov 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கியது.
-
காரைக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரயில்
04 Nov 2025சென்னை: காரைக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
என்னை கொலை செய்ய முயற்சி: பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் பரபரப்பு புகார்
04 Nov 2025சேலம், அன்புமணியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை பா.ம.க. எம்.எல்.ஏ., அருள் முன்வைத்துள்ளார்.


