முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 30 கோடி மக்களை நிலநடுக்கம் தாக்கும் அபாயம் : அதிர்ச்சி தகவல் வெளியீடு

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      உலகம்
Earthquack 2024-12-06

Source: provided

வாஷிங்டன் : உலகில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக இமயமலை உள்ளது. கடுமையாக பூமி குலுங்கும்போது, 30 கோடி மக்களை அது பாதிக்கும் என அமெரிக்க புவிஇயற்பியலாளர் எச்சரித்துள்ளார்.

மியான்மரில் கடந்த மார்ச் 28-ந்தேதி ரிக்டர் அளவுகோலில் 7.7 அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.  இந்த நிலநடுக்கத்திற்கு 2,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இந்நிலநடுக்கம் 300 அணுகுண்டுகளுக்கு இணையான ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளது என நிபுணர்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில், இதேபோன்றதொரு நிலைமை இந்தியாவுக்கு ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக எச்சரிக்கை தெரிவித்தபடியே இருக்கின்றனர். இதுபற்றி அமெரிக்க புவிஇயற்பியலாளரான ரோஜர் பில்ஹாம் கூறும்போது, ஒவ்வொரு நூற்றாண்டிலும் திபெத்தின் தென்முனைக்கு அடியில் 2 மீட்டர் அளவுக்கு இந்தியா சரிந்து வருகிறது. சில நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை இமயமலையில் இந்த அளவிலான சரிவால் ரிக்டரில் 8 அளவிலான நிலநடுக்கங்கள் இமயமலையை தாக்குகின்றன. ஆனால், கடந்த 70 ஆண்டுகளில், இமயமலையை கடுமையாக தாக்கும் அளவிலான அழுத்தம் வெளியிடப்படாமல் உள்ளது. அது நிச்சயம் நிகழும். சாத்தியத்திற்கான கேள்வியே இல்லை என அவர் கூறுகிறார்.

இந்தியாவில் நிலநடுக்க அதிர்வுகளை விட கட்டிடங்களே அதிக ஆபத்து ஏற்படுத்துபவையாக உள்ளன. நிலநடுக்க தடுப்பு கட்டுமானங்களுக்கான விதிகள் உள்ளன. ஆனால், அவை எப்போதும்போல் அலட்சியப்படுத்தப்படுகின்றன. நிலநடுக்கத்தில் இருந்து தப்பும் வகையில் மருத்துவமனைகள், பள்ளிகள், மின் உலைகள் வடிவமைக்கப்படுவதில்லை. பூமி குலுங்கும்போது, இவையே முதலில் சரியும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், இமயமலையில் ஏற்பட கூடிய நிலநடுக்கம், பெருங்கடலில் ஏற்படாமல் நேரிடையாக நிலத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தும் என பில்ஹாம் எச்சரித்து உள்ளார். வருங்காலத்தில் பெரிய அளவில் இமயமலை நிலநடுக்கம் (ரிக்டர் அளவில் 8.2 முதல் 8.9 வரை) ஏற்படும் சாத்தியம் உள்ளது. உலகில் நிலப்பகுதியில் இந்த அளவுக்கு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக இமயமலை உள்ளது. கடுமையாக பூமி குலுங்கும்போது, 30 கோடி மக்களை அது பாதிக்கும் என எச்சரிக்கிறார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து