எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் அனைத்து ஆட்டங்களும் கொழும்புவில் நடக்கிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.
இந்நிலையில், இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சமாரி அத்தபத்து கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி விவரம்: சமாரி அத்தபத்து (கேப்டன்), விஷ்மி குணரத்னே, ஹர்ஷிதா சமரவிக்ரமா, நிலாக்ஷி சில்வா, கவிஷா தில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, ஹாசினி பெரேரா, பியூமி வத்சலா, மனுடு நாணயக்காரா, டெவ்மி விஹங்கா, இனோகா ரனவீரா, இனோஷி பெர்னாண்டோ, ஹன்சிமா கருணாரத்னே, ராஷ்மிகா செவ்வந்தி, மல்கி மதரா, சுகந்திகா குமாரி, அச்சினி குல்சூரியா.
___________________________________________________________________________________________
ஐ.பி.எல். குறித்து திலக் வர்மா
நடப்பு ஐபிஎல் தொடரில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் லீக் சுற்றின் 41-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டிக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் திலக் வர்மா தனியார் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சியில் பேசுகையில், நான் ரோஹித் சர்மாவுக்கும் சூர்யகுமார் யாதவுக்கும் அடிக்கடி சொல்வது ஒன்றுதான். நான் இன்னும் கோப்பை வென்ற உணர்வை அனுபவிக்கவே இல்லை. இந்த ஆண்டு நாங்கள் முழு மனதோடு போராட தயாராக இருக்கிறோம்.
ஹார்திக் பாண்டியா உடன் நல்ல நட்புறவு இருக்கிறது. டி20 அறிமுகத்தின் போது அவரிடமிருந்து தொப்பியைப் பெற்றது மறக்கமுடியாத தருணம். நான் 2022 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸில் சேர்ந்தேன். இது எனக்கு நான்காவது சீசன். பல மூத்த வீரர்களுடனும், உள்நாட்டு வீரர்களுடனும் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அது நம்பிக்கையை அதிகரிக்கிறது. ஐ.பி.எல்.லில் சர்வதேச தரத்தில் இருக்கும் பலரை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு பயனுள்ளதாக இருக்கிறது என்றார்..
___________________________________________________________________________________________
பஹல்காம் சம்பவம் குறித்து கோலி
ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல்களையும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்தத் தாக்குதல் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “பெஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அமைதியும், வலிமையும் கிடைக்க வேண்டும் எனவும் இந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். இதேபோன்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ள பதிவில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நினைத்துக்கூட பார்க்க முடியாத வேதனையை அனுபவித்து வருகின்றனர். இந்த மாதிரியான நேரத்தில் நாம் அவர்களுடன் துணை நிற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
___________________________________________________________________________________________
ஐ.பி.எல்: பட்டாசுகள் வெடிக்க தடை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற மும்பை - ஐதராபாத் இடையிலான லீக் ஆட்டத்தின் போது பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரர்கள், நடுவர்கள் என அனைவரும் கைகளில் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்க வேண்டும் என பி.சி.சி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த போட்டியின் போது, சியர்லீடர்கள் நடனமாடக்கூடாது எனவும், பட்டாசுகள் வெடிக்கக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
___________________________________________________________________________________________
ஆர்.சி.பி. அணி புதிய சாதனை
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் (இன்ஸ்டாகிராம், எக்ஸ்) புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றன. இதன் காரணமாக அணிகளின் சமூக வலைத்தள பக்கங்களை ரசிகர்கள் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 19 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை ஆர்.சி.பி. அணி படைத்துள்ளது. அந்த அணிக்கு அடுத்தபடியாக 18.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் சிஎஸ்கே அணி 2-வது இடத்திலும், 17 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தே.மு.தி.க.வுடன் கூட்டணியா..? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
08 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையா என்ற தகவலுக்கு அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார்.
-
விசில் அடித்த த.வெ.க.வினர்: செங்கோட்டையன் கிண்டல்
08 Feb 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க.
-
ஓ.பன்னீர் செல்வத்துடன் பேச மூன்ற மாத அவகாசம் உள்ளது: அண்ணாமலை பேட்டி
08 Feb 2026சிவகங்கை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனித்துவிடப்படவில்லை. எங்களுடன் தான் இருக்கிறார்.
-
வருகிற 13-ம் தேதி சேலத்தில் நடைபெறும் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி
08 Feb 2026சேலம், சேலத்தில் வரும் 13-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சேலம் மாநகர காவல் துறை அனுமதி வழங்கியுள்
-
தேர்தலில் தி.மு.க.வுடன்தான் காங்கிரஸ் கட்சி பயணிக்கும்: மதுரையில் செல்வப்பெருந்தகை பேட்டி
08 Feb 2026மதுரை, காங்கிரஸ் கட்சி வருகிற தேர்தலில் தி.மு.க.வுடன் தான் பயணிக்கும்.
-
திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஆந்திரா முன்னாள் முதல்வரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
08 Feb 2026சென்னை, சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
சட்டசபை தேர்தலில் தி.மு.க.விடம் அதிக தொகுதிகளை கேட்போம்: திருமா திட்டவட்டம்
08 Feb 2026சென்னை, இந்த முறை சட்டசபை தேர்தலில் நாங்கள் கூடுதலான இடங்களில் போட்டியிட விரும்புகிறோம்.
-
எப்ஸ்டீனை சந்தித்தேனா? தலாய் லாமா விளக்கம்
08 Feb 2026லகாசா, எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரத்தில், தனது பெயரை தொடர்புப்படுத்தி வெளியாகும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என திபெத்திய மதகுரு தலாய் லாமா மறுத்துள்ளார்.&nbs
-
அரசியல் களத்தில் த.வெ.க.வுக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டும் தான்: செங்கோட்டையன் பேட்டி
08 Feb 2026ஈரோடு, தமிழ்நாடு அரசியல் களத்தில் த.வெ.க.வுக்கு எதிரி தி.மு.க.தான். அ.தி.மு.க. ஒரு கட்சியே அல்ல என்று த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
குரூப்-2, 2ஏ தேர்வுகள் திடீர் ரத்து: தேர்வர்கள் மறியலால் பரபரப்பு
08 Feb 2026சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டதால் சென்னை பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –08-02-2026
08 Feb 2026 -
மத்திய அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது: மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பெருமிதம்
08 Feb 2026புதுடில்லி, மத்திய அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது என்றும், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நமது வ
-
மலேசியாவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் பாடல்
08 Feb 2026கோலாலம்பூர், மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த விருந்து நிகழ்ச்சியில், நடிகர் எம்.ஜி.ஆரின் ’நாளை நமதே’ பாடல் பா
-
பிரதமர் மோடியுடனான சந்திப்பு இருநாட்டு உறவுகளுக்கு முக்கியம்: மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்
08 Feb 2026கோலாலம்பூர், பிரதமர் மோடியுடனான சந்திப்பு இருநாட்டு உறவுகளுக்கு மிகவும் முக்கியமானது என மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
08 Feb 2026- இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனம், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனம்.
- வைத்தீசுவரன் செல்வமுத்து குமாரசுவாமி புறப்பாடு.
- திருமயம் ஆண்டாள் பவனி.
- இராமநாதபுரம் செட்ட
-
இன்றைய நாள் எப்படி?
08 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
08 Feb 2026


