முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்மை அன்புக்கான சான்று: தாஜ்மகாலை புகழ்ந்த ஜே.டி.வான்ஸ்

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      இந்தியா
JD-Vance-2025-04-24

லக்னோ, தாஜ்மகால் உண்மை அன்புக்கான சான்று என்று ஜே.டி.வான்ஸ் புகழாரம் சூட்டினார்.

தாஜ்மகால் உண்மையான அன்புக்கான சான்று என்று அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் புகழ்ந்துள்ளார். அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ் மற்றும் தனது மூன்று குழந்தைகளுடன் தாஜ்மகாலை பார்வையிட்டார். இதற்காக நேற்றுமுன்தினம் ஜெய்ப்பூரில் இருந்து ஆக்ரா விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய அவரை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து தாஜ்மகால் வரை துணை அதிபர் வான்ஸ் குடும்பத்தினர் காரில் பயணம் செய்தனர். தாஜ்மகாலை குடும்பத்துடன் வான்ஸ் கண்டு மகிழ்ந்தார். பின்னர் அவர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில், தாஜ்மகால் அற்புதமானது. உண்மையான அன்புக்கான சான்று, மனித புத்திகூர்மை மற்றும் இந்தியா என்ற மகத்தான நாட்டிற்கான மரியாதை என்று குறிப்பிட்டுள்ளார். துணை அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜெய்ப்பூரில் உள்ள சிட்டி பேலஸ் செல்வதற்கு திட்டமிட்டு இருந்தனர். பின்னர் தங்களது பயணத்தை ரத்து செய்தனர். நேற்று அவர்கள் அமெரிக்கா திரும்பி செல்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து