எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருச்சி : பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால் அதை உலகளவில் அம்பலப்படுத்த வேண்டும். அவர்களை அந்நியபடுத்த வேண்டுமே தவிர யுத்தம் தேவையில்லாதது" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
திருச்சியில் நடைபெறும் திராவிடர் கழகம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று திருச்சி வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் அளித்த பேட்டி: ஜாதி, மதம், இனம், மொழி என்கிற வேறுபாடு இல்லாமல் இந்தியர் என்ற உணர்வோடு பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும். ஆனால், இந்தியாவில் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பகை வளர்த்து, ஒற்றுமை இல்லாத சூழலை சங்பரிவார்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. மத நல்லிணக்கம்தான் இந்திய ஒருமைப்பாட்டுக்கு தேவை என்பதை சங்பரிவார்கள் இந்த சூழலிலாதாவது புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என கூறுவதில் எங்களுக்கு எந்த அரசியல் ஆதாயமும் இல்லை. ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே. 370 சட்டப்பிரிவை நீக்கினால் ஜம்மு காஷ்மீரில் எந்த பயங்கரவாத நடவடிக்கைகளும் இருக்காது என பாஜக அரசு திரும்பத் திரும்ப கூறி வந்தது. அங்கு சுற்றுலா செல்லலாம் என்கிற அறிவிப்பை பாஜக அரசு வெளியிட்டது. அதனை நம்பி மக்கள் அங்கு சுற்றுலா சென்ற போது இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் பதவி விலகி முன்மாதிரியாக விளங்கினார். இந்நிலையில்தான் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். மீண்டும் மீண்டும் அதை வலியுறுத்துவோம். காஷ்மீரில் நடந்த தாக்குதல் இருநாட்டிற்கும் இடையேயான போராக மாறிவிடக்கூடாது. பயங்கரவாத தாக்குதலுக்கு ஒருநாடு பொறுப்பு என பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்கக்கூடாது. நம்முடைய வலிமையை வேறு நாட்டின் மீது நிரூபித்து காட்டக்கூடாது. அது உலக நாடுகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால், அதை உலக அளவில் அம்பலப்படுத்த வேண்டும். அவர்களை அந்நிய படுத்த வேண்டுமே தவிர யுத்தம் தேவையில்லாதது. இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால், இந்தியாவில் சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு பயன்படவில்லை, மாறாக அதை தீவிரப்படுத்துவதற்கு தான் பயன்பட்டுள்ளது என்பது காஷ்மீரில் தற்போது நடந்துள்ள தாக்குதல் தெளிவுபடுத்தி உள்ளது. பயங்கரவாதிகள் ஜாதி, மதம் என எதையும் பார்க்க மாட்டார்கள். காஷ்மீரில் நடந்த தாக்குதல் மதத்தை பார்த்து நடந்த தாக்குதல் போல் தெரியவில்லை.
இந்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது. காஷ்மீருக்கு வரும் பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் எச்சரிக்கை விடும் விதமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை உள்ளது உள்ளபடியே புரிந்து கொள்ள வேண்டும். இதில் எந்த வித கற்பிதமும் தேவையில்லை. வி.சி.க சார்பில் வக்ஃபு சட்டத்தை கண்டித்து வரும் மே 31-ம் தேதி திருச்சியில் மிகப்பெரிய பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும்,, தமிழ்நாடு அரசுக்கும் முரண்பாடுகள் கூர்மை அடைந்துள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அவர் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தது தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி தருவதாக எல்லோராலும் உணரப்பட்டது. துணை வேந்தர்களுக்கும் நெருக்கடியை உருவாகியது. அந்த நெருக்கடியை ஆளுநர் திட்டமிட்டு உருவாக்கியுள்ளார். நேற்று துணைவேந்தர்கள் அந்த மாநாட்டை புறக்கணித்து உள்ளார்கள். ஆளுநர் ஆர்.என். ரவியின் இதுபோன்ற செயல்பாடுகள் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியா மீது தாக்குதல் நடத்திய ஒரு வாரத்தில் சீனா அணு ஆயுத சோதனை மேற்கொண்டது: அமெரிக்கா
07 Feb 2026நியூயார்க், இந்தியா மீது தாக்குதல் நடத்திய ஒரு வாரத்தில் சீனா ரகசிய அணு ஆயுத சோதனை மேற்கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்.. மேக் இந்தியா திட்டத்தை மேலும் வலுவாக்குகிறது: பிரதமர் மோடி..!
07 Feb 2026டெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா முழு வரிவிலக்கு அளித்த இந்திய ஏற்றுமதி பொருட்கள் எவை?
07 Feb 2026புதுடில்லி, அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ரத்தினங்கள், வைரங்கள், மருந்துப் பொருட்கள், காபி, வாழைப்பழம் உள்ள
-
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடம்: பாகிஸ்தான் அதிர்ச்சி
07 Feb 2026நியூயார்க், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அரசுத்துறை வெளியிட்ட இந்திய வரைபடம் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது
-
தங்கம், விலை மீண்டும் உயர்வு
07 Feb 2026சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையானது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம்: ஜூன் வரை கெடு விதித்த அமெரிக்கா: ஜெலன்ஸ்கி
07 Feb 2026கீவ், ரஷ்யா - உக்ரைன் இடையே 4 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டைக் கொண்டுவருவதற்காக ஜூன் மாதம் வரையில் அமெரிக்கா காலக்கெடு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –07-02-2026
07 Feb 2026 -
இந்தியா மீதான 25 சதவீதம் வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்ட ட்ரம்ப்
07 Feb 2026நியூயார்க், இந்தியா மீதான 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை கையெழுத்திட்டார்.
-
டிஜிட்டல் மோசடிகளில் பணத்தை இழப்பவர்களுக்கு விரைவில் ரூ.25,000 இழப்பீடு ரிசர்வ் வங்கி அறிவிப்பு
07 Feb 2026மும்பை, டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு மொத்த இழப்புத் தொகையின் 85 சதவீதம் வரை வழங்கப்படும்.
-
அ.ம.மு.க. நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கினார் டி.டி.வி.தினகரன்
07 Feb 2026சென்னை, சசிகலாவை சந்தித்த அ.ம.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கி டி.டி.வி.தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிக்கும்: மத்திய ரிசர்வ் வங்கி கணிப்பு
07 Feb 2026டெல்லி, 2025-26 ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜி.டி.பி.) 7.4 சதவிகிதம் அதிகரிக்கும் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
விக்கிரவாண்டி தொகுதியில் த.வெ.க. தலைவர் போட்டி?
07 Feb 2026சென்னை, விக்கிரவாண்டி தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை: டெல்லியில் ராகுல் இன்று ஆலோசனை
07 Feb 2026சென்னை, தமிழக சட்டசபையை முன்னிட்டு தி.மு.க.வுடனான கூட்டணி விவகாரம் குறித்து ராகுல் காந்தி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
-
ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ வெளியிட்ட ட்ரம்ப்..!
07 Feb 2026வாஷிங்டன், ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ வெளியிட்ட நிலையில் அதிபர் ட்ரம்ப், இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
-
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தையை வாய்ப்பு கிடக்க உள்ளது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை
07 Feb 2026டெல்லி, இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்ததால் புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிக
-
இனி அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் கிடையாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
07 Feb 2026சென்னை, அரசு ஊழியர், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்தால், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் பெற தகுதியில்லை என சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு த
-
கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்
07 Feb 2026கோவை, கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நாளை (வருகிற 9-ந் தேதி- திங்கட்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில்
-
வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா உள்பட த.வெ.க. விருப்ப மனுவில் கேட்கப்பட்ட 36 கேள்விகள்
07 Feb 2026சென்னை, வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா என்பது உள்ளிட்ட த.வெ.க. விருப்ப மனுவில் 36 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க.வின் கிளையாக இருந்த அ.தி.மு.க., தற்போது இலையாக மாறிவிட்டது: துணை முதல்வர்
07 Feb 2026விருதுநகர், பா.ஜ.க.வின் கிளையாக இருந்த அ.தி.மு.க., தற்போது இலையாக மாறிவிட்டதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
தென்னிந்தியாவின் இரும்பு மனிதர் தமழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. எம்.பி. கனிமொழி புகழாரம்
07 Feb 2026விருதுநகர், மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்றும் தென்னிந்தியாவின் இரும்பு மனிதர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும் தி.மு.க. எம்.பி.
-
வார ராசிபலன்
07 Feb 2026


