முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார்: பாக். பிரதமர் ஷெபாஸ் அறிவிப்பு

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      இந்தியா
Pak 2024-02-04

புதுடெல்லி, ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷொபஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். 

அபோதாபாத்தில் உள்ள ராணுவ அகாடமியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர், "சமீபத்தில் பஹல்காமில் நடந்த துயரச் சம்பவம், பழி சுமத்தும் விளையாட்டுக்கான மற்றொரு உதாரணமாகும். இது ஒரு முடிவுக்கு வரவேணடும். எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான, நம்பகமான விசாரணைகளிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. அதேநேரத்தில் கடந்த 2019-ம் ஆண்டின் இந்தியாவின் ஊடுருவலுக்கு பாகிஸ்தானின் உறுதியான பதிலடியால் நிரூபிக்கப்பட்ட படி, எந்தவொரு தவறான சாகசத்துக்கும் எதிராக தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை காப்பதற்கு பாகிஸ்தான் முழு திறனுடன் தயார் நிலையில் உள்ளது" என்று தெரிவித்தார்.

சர்வதேச விசாரணையாளர்களால் நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜ் முகம்மது ஆசிஃப் கூறியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக ஜம்மு காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் புல்வெளியில் ஏப்.21 திங்கள்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள். இந்தக் கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம் உட்பட கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. அதேபோல் அட்டாரி எல்லையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை மூடியது, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுக்காப்பைக் குறைத்தது போன்றவை அடங்கும். இதனிடையே அட்டாரி சோதனைச் சாவடி வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானியார்கள் மே 1ம் தேதிக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து