முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: 5-ம் கட்ட கலந்தாய்வு மே 5-ல் நடைபெறும் என அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      தமிழகம்
TNPSC 2022 12 20

சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பதவிகளுக்கான  5வது கட்ட கலந்தாய்வு வரும் மே 5-ம் தேதி சென்னையில்  நடைபெறும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பதவிகளுக்கு நடத்தப்பட்ட முதல் மூன்று கட்ட கலந்தாய்வின் முடிவில் நிரப்பப்படாமல் மீதமுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான 5வது கட்ட கலந்தாய்வு வரும் மே 5-ம் தேதி சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை பதிவிறக்கம் செய்ய -https://www.tnpsc.gov.in/Document/Counselling/GR_IV_01_2024_JA_TYP_STENO_PHASE_5.pdf

குரூப் 4 தேர்வின் 5வது கட்ட மூலச்சான்றிதழ்கள் மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைபபணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், இந்த விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.. தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து