எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது.
கடன் பெற்றவர்களிடம் கடனை வலுக்கட்டாயமாக வசூல் செய்வதை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 26-ம் தேதி சட்டசபையில் அறிமுகம் செய்தார். இந்த மசோதா நேற்று விவாதத்திற்கு விடப்பட்டது. அதனை தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலைசெய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும். வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும். 20-ம் பிரிவில் கூறப்பட்டுள்ள மிரட்டுதல், பின் தொடருதல் போன்ற குற்றங்களைச் செய்தால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும். கடன் வாங்கியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை, அதாவது அவரின் பெற்றோர், கணவர் அல்லது மனைவி, குழந்தைகள் ஆகியோரை கடன் வழங்கிய நிறுவனமோ அல்லது அதன் முகவரோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தக்கூடாது. ஏற்கெனவே நிதி சுமையில் இருக்கும் கடனாளிகளிடம் இருந்து கடன்களை வசூலிக்க சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை விதிக்க இம்மசோதா வகைசெய்யும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |