முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைதியை மீட்டெடுக்க இந்தியாவுடன் ராஜீய ரீதியில் முயற்சி: நவாஸ் ஷெரீப்

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      உலகம்
Nawaz-Sharif 2023-09-10

Source: provided

லாகூா் : இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை மீட்டெடுக்க ராஜீய ரீதியில் உள்ள அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் அரசு பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீப் விரும்புவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுதொடா்பாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் ஷெரீப் கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாவது: பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இதைத்தொடா்ந்து லாகூரில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நவாஸ் ஷெரீபிடம் அவரின் சகோதரரும், பாகிஸ்தான் பிரதமருமான ஷாபாஸ் ஷெரீப் எடுத்துரைத்தாா்.

அணு ஆயுதங்கள் கொண்ட இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை மீட்டெடுக்க ராஜீய ரீதியில் உள்ள அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் அரசு பயன்படுத்த வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் விரும்புகிறாா். மூா்க்கமான நிலைப்பாட்டை எடுக்க அவா் விரும்பவில்லை என்று தெரிவித்தன.

பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை குறித்தும் இந்தியா ஆலோசித்து வருவதாக ஊகிக்கப்படும் நிலையில், நவாஸ் ஷெரீப் இவ்வாறு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து