முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் பொறுப்பேற்பு

புதன்கிழமை, 30 ஏப்ரல் 2025      ஆன்மிகம்
Kanchipuram 2024-05-26

Source: provided

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நேற்று பொறுப்பேற்றார். 

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது பீடாதிபதியான ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நேற்று முதல் சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று அழைக்கப்படுவார் என, அவருக்கு சந்​நி​யாஸ்ரம தீட்சை வழங்கிய சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது ஆசி உரையில் குறிப்பிட்டார்.

கடந்த 25-ம் தேதி காஞ்சி சங்கர மடம் வெளியிட்ட அறிக்கையில், "ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்​தின் 70-வது பீடா​திபதி ஜகத்​குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், புனித அட்சய திரு​தியை தினத்​தில் (ஏப்​.30-ம் தேதி, புதன்​கிழமை) ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்​ரமண்ய கணேச சர்மா திரா​விட்​டுக்​கு, காஞ்சி காமாட்சி அம்​மன் கோயி​லில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்​தத்​தில் காலை 6 மணி முதல் 9 மணிக்​குள் சந்​நி​யாஸ்ரம தீட்சை அருள உள்ளார்" என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்​ரமண்ய கணேச சர்மா திராவிட்​டுக்​கு, சந்​நி​யாஸ்ரம தீட்சை வழங்கும் வைபவம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்தத்தில் நேற்று காலை நடைபெற்றது. 

தீர்த்த அபிஷேகம்: சந்​நி​யாஸ்ரம தீட்சை பெருவதற்கு முன்பாக ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்​ரமண்ய கணேச சர்மா திரா​விட்​, திருக்குளத்தில் இறங்கி தான் அணிந்திருந்த கடுக்கண், மோதிரம், பூணூல், அரைஞாண் கயிறு ஆகியவற்றை துறந்து, சந்நியாசத்தை ஏற்றார். அதன்பின், வேத மந்திரங்கள் முழங்க காலை 6.30 மணி அளவில் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், அவருக்கு தீட்சை வழங்கி பிறகு காவி வஸ்திரம், கமண்டலம், தண்டத்தை வழங்கினார். தொடர்ந்து இளைய மடாதிபதியின் தலையில் சாளக்கிராமம் வைத்து, சங்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, பல்வேறு மந்திர உபதேசங்களைச் செய்தார். தொடர்ந்து, பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், அவருக்கு ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற திருநாமத்தை சூட்டினார். 

இதனைத் தொடர்ந்து குழுமியிருந்த பக்தர்களுக்காக ஆசி உரை வழங்கிய பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், "நேற்று நடந்த இந்த மகத்தான, பிரம்மாண்டமான நிகழ்ச்சி பரம்பரையை, பாரம்பரிய நம்பிக்கைகளை நாம் தெரிந்து கொள்வதற்கு, புரிந்து கொள்வதற்கு அதன்படி நடப்பதற்கான இந்த தேசத்திலேயே மிக மிக முக்கியமான பீடமாக விளங்கக்கூடிய காஞ்சி காமகோடி பீடத்தினுடைய தியாக பரம்பரையின் அடையாளமாக, தியாக பரம்பரையின் சிகரமாக, தியாக பரம்பரையின் உண்மையான உருவமாக நேற்று நம்மிடையே, அந்த குடும்பத்தில் இருந்து இவர் இந்த பக்கம் வந்திருந்தாலும் காஞ்சி காமகோடி பீட குடும்பத்தில் இவர் சேர்ந்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து