முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 1 மே 2025      தமிழகம்
Shekar-Babu-2025-05-01

சென்னை, சென்னையில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் திருமண மண்டபம், பள்ளி வகுப்பறை, கல்லூரி கட்டிட கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய திருமண மண்டபம், பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், கல்லூரி புதிய கட்டடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று (மே 1) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை, எழும்பூர் சீனிவாச பெருமாள் கோயில் சார்பில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய திருமண மண்டபம், கீழ்ப்பாக்கம், ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கொளத்தூர் பூம்புகார் நகரில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கல்லூரி கட்டடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று (மே 1) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

2024 – 2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை  அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதலாக ரூ.11.15 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் 32 வகுப்பறைகள், ஆசிரியர்கள் ஓய்வறைகள், 5 ஆய்வங்கங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன.

மயிலாப்பூர், கபாலீசுவரர் கோயில் சார்பில் கொளத்தூரில் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  வரும் கல்வியாண்டில் கல்லூரி வகுப்புகள் புதிய கட்டடத்தில் நடைபெறும் வகையில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இவற்றை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று (மே 1)  ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும், பொறியாளர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா ராஜன் மற்றும் அரசு உயர் அலுவர்கள் கலந்துகொண்டனர், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து