முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்.: விக்னேஷ் புதூர் விலகல்

வியாழக்கிழமை, 1 மே 2025      விளையாட்டு
ipeela

Source: provided

காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து இளம் சுழல்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதுர் விலகியதாக 5 முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது. கேரளத்தைச் சேர்ந்த இளம் வீரர் (24) விக்னேஷ் புதூர் சி.எஸ்.கே. அணிக்கு எதிராக அறிமுகமாகிய சிறப்பாக பந்து வீசினார். கடைசி சில போட்டிகளில் சுமாராக பந்துவீசினாலும் இந்திய ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்தவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.

தற்போது, விக்னேஷ் புதூருக்குப் பதிலாக 31 வயது ரகு சர்மா அணியில் இணைந்துள்ளார். வலது கை சுழல்பந்து (லெக் ஸ்பின்னர்) வீச்சாளரான ரகு சர்மா மும்பை அணியின் பந்துவீச்சு குழுவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ரகு சர்மா பஞ்சாப், புதுச்சேரி அணிகளுக்காக விளையாடியுள்ளார். 11 முதல்தர போட்டிகளில் 57 விக்கெட்டுகளும் 3 டி20 போட்டிகளில் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் பெங்களூரு அணி 7 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. விராட் கோலி இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் , தற்போது உங்களுக்கு பிடித்த பாடல் எது ? என விராட் கோலியிடம் கேட்கப்பட்டது . அதற்கு பதிலளித்த விராட் கோலி. 'நீ சிங்கம் தான்' என்ற பாடல்  மிகவும் பிடிக்கும் என பதிலளித்தார் . சிம்பு நடித்த 'பத்து தல'படத்தில் 'நீ சிங்கம் தான் பாடல்' இடம் பெற்றுள்ளது  . இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 

நதீம் இன்ஸ்டா பக்கம் முடக்கம்

பாகிஸ்தானைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அர்ஷத் நதீம், 2024-ல் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எரிதலில் தங்கம் வென்றுள்ளார். இந்நிலையில், இந்தியாவிலுள்ள அவரது ரசிகர்கள் நதீமின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்க்க முயன்றபோது அது சட்டப்பூர்வமாக முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான பல அதிரடியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. 

அதன் அடிப்படையில், பாகிஸ்தான் பிரபலங்கள் பலரது சமூக வலைதளப் பக்கங்களும் இந்தியாவில் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த பல யூடியூப் சேனல்களும், இந்தியாவுக்கு எதிரான பொய்யான தகவல்களை பரப்பியதால் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பாகிஸ்தானின் முன்னாள் கிரிகெட் வீரர்களான சோயிப் அக்தர், பாசித் அலி மற்றும் ஷாஹித் அஃப்ரிடி ஆகியோரது யூடியூப் சேனல்களும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்படவில்லை.

பதிரானாவுக்கு சிமன்ஸ் யோசனை

ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் அணியாக வெளியேறியது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே. வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சி.எஸ்.கே.வின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவரான மதீஷா பதிரானாவுக்கும் இந்த சீசன் சரியாக அமையவில்லை. இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 9 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். அவரது எகானமி 10.39 ஆக உள்ளது. மேலும், இந்த சீசனில் அவர் நிறைய அகலப் பந்துகளை (வைட் பால்ஸ்) வீசி வருகிறார்.

மதீஷா பதிரானாவின் பந்துவீச்சு குறித்து சென்னை சூப்பர் கிங்ஸின்  பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிமன்ஸ் பேசியதாவது: பதிரானாவின் பந்துவீச்சு ஆக்‌ஷனில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.  அவர் துல்லியமாக பந்துவீசவில்லையா என்பதை என்னால் உறுதிபட கூற முடியாது. அவரது பந்துவீச்சுக்கு எதிராக நன்றாக விளையாட பேட்டர்கள் பழகிக்கொண்டுவிட்டார்கள்.  பந்துவீச்சில் பதிரானா பயன்படுத்தும் யுக்திகளை பேட்டர்கள் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு விளையாடுகிறார்கள். அதனால், பதிரானா எப்படி பந்துவீசப் போகிறார் என்பதை அவர்களால் எளிதில் கணிக்க முடிகிறது. போட்டிகளில் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு பதிரானா அவரது பந்துவீச்சில் மாற்றங்களை கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்றார்.

மனைவிக்கு வாழ்த்து கூறிய கோலி

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நேற்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளுக்கு அவரது கணவர் விராட் கோலி இன்ஸ்டாகிராம் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அந்த பதிவில் அவர்," என் சிறந்த தோழி, என் வாழ்க்கைத் துணை, என் பாதுகாப்பான இடம், என் சிறந்த பாதி, என் அனைத்திற்கும், எங்கள் அனைவரின் வாழ்க்கைக்கும் வழிகாட்டும் ஒளி நீ.. உன்னை நாங்கள் தினமும் அதிகமாக நேசிக்கிறோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே.." என குறிப்பிட்டிருந்தார்.

மேக்ஸ்வெல் திடீர் விலகல்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் எழுச்சி பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த மேக்ஸ்வெல் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முழுமையாக விளக்கியுள்ளதாக அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் தெரிவித்தார்.

மேக்ஸ் வெல் இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் வெறும் 48 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதே சமயம் 13 ஓவர்கள் பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

மாட்ரிட் ஓபன்: அரையிறுதியில் சபலென்கா

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்டியூக் உடன் மோதினார்.

இதில் சபலென்கா முதல் செட்டை 7-6 (7-4) என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் உக்ரைன் வீராங்கனை கடும் சவால் அளித்தார். சபலென்கா 2வது செட்டை 7-6 (9-7) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இன்று  நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன் மோதுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து