முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் கனமழை: வீடு இடிந்து விழுந்து தாய், 3 குழந்தைகள் பலி

வெள்ளிக்கிழமை, 2 மே 2025      இந்தியா
Rain 2023 07-09

Source: provided

புதுடெல்லி : டெல்லில் நேற்று அதிகாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், வீடு ஒன்றின் சுவர் இடிந்து விழுந்தததில் தாய் மூன்று குழந்தைகள்  என நான்கு பேர் உயிரிழந்தனர்.  

நான்கு பேர் உயிரிழப்பு குறித்து டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், “நஜாஃப்கார்க்கில் உள்ள கர்காரி நஹார் கிராமத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது.   இடிபாடுகளில் இருந்து நான்கு பேர் மீட்கப்பட்டனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு வேகமாக அழைத்துச் சென்றோம். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் நான்கு பேரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாங்கள் போலீஸாருக்கு தெரிவித்துள்ளோம்.” என்றார்.

டெல்லியின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்திருப்பதையும், சாலையில் தேங்கிய நீரினால் மக்கள் சிக்கித் தவிப்பதையும் காட்டும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.  மின்டோ சாலை, ஆர்.கே.புரத்தில் உள்ள மேஜர் சோம்நாத் மார்க் மற்றும் கான்புரி போன்ற பகுதிகள் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே முதல்வர் ரேணுகா குப்தா மற்றும் மூத்த அதிகாரிகள் சாலையில் நீர் தேங்கியிருப்பதை ஆய்வு செய்தனர். முதல்வர் கூறுகையில், “மோசமான வடிகால் வசதி மற்றும் சாலைகளால் நீர் தேங்கி நிற்கிறது” என்றார்.

மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது என டெல்லி விமான நிலையம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு, வருகை தாமதமடைந்துள்ளது மற்றும் 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து