முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. விரைவுச்சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி திடீர் ஒத்திகை பார்த்த இந்தியா..!

வெள்ளிக்கிழமை, 2 மே 2025      இந்தியா
Air

Source: provided

புதுடில்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்திய விமானப்படையினர், போர் விமானங்களை விரைவு சாலைகளில் தரையிறக்கி ஒத்திகையில் ஈடுபட்ட சம்பவம், பாகிஸ்தானை பதற்றமடையச் செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்திய மக்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளின் பின்னணியில் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம் என்றும், இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கா விரைவுச் சாலையில் அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுபட்டிருப்பது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாஜகான்பூரில் உள்ள கங்கா விரைவுச்சாலையில், ரபேல், ஜாகுவார் மற்றும் மிராஜ் ஆகிய போர் விமானங்களை, அவசர காலங்களில் தரையிறுக்கும் ஒத்திகையில் விமானப்படையினர் ஈடுபட்டனர். இரவு மற்றும் பகல் நேரங்களில் போர் விமானங்களை தரையிறக்கும் விதமாக, இந்தியாவில் முதல் ஓடுதளமாக கங்கா விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் எல்லையில் இருந்து 1,000 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து