முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவின் மிரட்டல் பலிக்காது: சீனா எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 2 மே 2025      உலகம்
China 2024 07 31

பெய்ஜிங், வரி விதிப்பு குறித்து சீனாவுடன் அமெரிக்கா நடத்த விரும்பும் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்க மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது, வரி விதிப்பு மற்றும் வர்த்தகப் போரைத் தொடங்கியது, அமெரிக்காதான். அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், அதில் நேர்மைத்தன்மை இருக்க வேண்டும். அந்நாட்டின் தவறான நடைமுறைகளைச் சரிசெய்வது, சீனா மீது மட்டுமான ஒருதலைப்பட்ச வரிவிதிப்பு ஆகிய பிரச்னைகளில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு பேச்சுவார்த்தையிலும், அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச வரிவிதிப்பு நடவடிக்கைகள் சரி செய்யப்படாவிட்டால், அது அந்நாட்டின் நேர்மையின்மையைத்தான் குறிக்கும்; அதுமட்டுமின்றி, அந்நாட்டின் மீதான நம்பிக்கையைக் குறைக்கும்.

மேலும், பேச்சுவார்த்தையின்போது, வற்புறுத்தலோ மிரட்டலோ சீனாவிடம் பலிக்காது என்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மீது பல்வேறு நாடுகள் அதிக வரி விதிப்பதாகக் கூறி, சீனாவைத் தவிர்த்து, மற்ற நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். மேலும், அமெரிக்காவுக்கு எதிராக சீனா செயல்படுவதாகக் கூறி, சீன பொருள்களுக்கு மட்டும் 245 சதவிகிதம்வரையில் வரியை அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்தது. இதற்கு பதிலடியாக, அமெரிக்கா மீது சீனாவும் வரி விதிப்பை அறிவித்தது. இதனிடையே, வரிவிதிப்பு குறித்து, தன்னிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். இருப்பினும், அவ்வாறு எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் மறுத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து