முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 8,867 கோடியில் கட்டப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

வெள்ளிக்கிழமை, 2 மே 2025      இந்தியா
Modi 2024-09-15

Source: provided

விழிஞ்சம் : கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ. 8,867 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் கடல்சார் வலிமை மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் துறைமுகத் திறன் இரட்டிப்பாகியுள்ளது. செயல்திறன் மேம்பட்டுள்ளது. விழிஞ்சம் துறைமுகம் ரூ.8,800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் சரக்கு கையாளும் திறனை விரைவில் மூன்று மடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது பெரிய சரக்குக் கப்பல்களை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு முக்கியமான தேவையை நிவர்த்தி செய்கிறது. 

விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவின் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும். பெரிய சரக்கு கப்பல்களை நிறுத்த இடமளிக்கும் வகையில் துறைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, இந்தியாவின் 75 சதவீத டிரான்ஷிப்மென்ட் நடவடிக்கைகள் வெளிநாட்டு துறைமுகங்களில் நடத்தப்பட்டன. இதன் விளைவாக நாட்டுக்கு குறிப்பிடத்தக்க வருவாய் இழப்பு ஏற்பட்டது என தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர், நான் இப்போதுதான் துறைமுகத்தைப் பார்வையிட்டேன். ஆனால் குஜராத் மக்கள் கவுதம் அதானி கேரளாவில் இவ்வளவு பெரிய துறைமுகத்தைக் கட்டியுள்ளார் என்பதை அறிந்ததும் குஜராத்தில், அவர் 30 ஆண்டுகளாக துறைமுகங்களில் பணியாற்றி வருகிறார். ஆனால் இதுபோன்ற துறைமுகத்தை அவர் ஒருபோதும் கட்டியதில்லை. எனவே அவர் குஜராத் மக்களின் கோபத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று நகைச்சுவையாகக் கூறினார். இது பார்வையாளர்களிடமிருந்து சிரிப்பை வரவழைத்தது.

முன்னதாக, துறைமுகத்தின் போக்குவரத்து மையத்தின் செயல்பாட்டு வசதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். வெற்றிகரமான சோதனை ஓட்டங்களைத் தொடர்ந்து, துறைமுகம் கடந்த ஆண்டு டிசம்பரில் அதன் வணிக ரீதியான செயல்பாட்டுச் சான்றிதழைப் பெற்றுள்ளது. சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் நாட்டின் இணைப்பை மேலும் அதிகரிக்கும் வகையிலான விழிஞ்சம் சர்வதேச துறைமுகம், சரக்குகளை மாற்றுவதற்கு மற்ற சர்வதேச துறைமுகங்களைச் சார்ந்திருப்பதைக் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடக்க விழாவில் கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன், கவுதம் அதானி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து