முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடி லாவகமாக கையாள்வார் : ரஜினிகாந்த்

வியாழக்கிழமை, 1 மே 2025      சினிமா      இந்தியா
Rajini 2024-01-21

மும்பை, காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடி லாவகமாக கையாள்வார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

மும்பையில் நேற்று 'வேவ்ஸ்' உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில் நடிகர்கள் மோகன்லால், ரஜினிகாந்த், ஹேமமாலினி, சிரஞ்சீவி, அக்சய்குமார், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி. காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது, இரக்கமற்ற செயல். மோடியின் திறமையை ஒரு தசாப்தமாக நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். காஷ்மீர் விவகாரத்தை தைரியமாகவும் லாவகமாகவும் பிரதமர் மோடி கையாள்வார். பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியை கொண்டு வருவார்

பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்துவதால், தேவையற்ற விமர்சனங்கள் காரணமாக அரசு, இந்த நான்கு நாள் நிகழ்வை ஒத்திவைக்கக்கூடும் என்று பலர் கூறினர். ஆனால் பிரதமர் மோடி மீதான எனது நம்பிக்கையின் காரணமாக இந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கும் என்று நான் நம்பிக்கையுடன் இருந்தேன். அதன்படியே, இந்நிகழ்ச்சி நடைபெற்றது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து