முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேதார்நாத் கோவில் நடை திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வெள்ளிக்கிழமை, 2 மே 2025      இந்தியா
Kailash-Mansarovar 2025-04-

Source: provided

டேராடூன் : கேதார்நாத் கோயிலின் நடை நேற்று கோலாகலமாகத் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

உத்தரக்கண்ட் மாநிலத்தில் இமயமலை தொடரில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் 12 ஜோதிர்லிங்களில் 11வது ஆகும். சார்தாம் யாத்திரையின் முக்கிய தலமாகவும் விளங்குகிறது. இந்தக் கோயில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மந்தாகினி ஆற்றில் கரையில் 3,583 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதங்களில் கோயில் நடை திறக்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான சார் தாம் யாத்திரை நேற்று தொடங்கியது. அடுத்த ஆறு மாதங்களுக்கு பக்தர்கள் தரிசிக்கலாம்.

முன்னதாக பாதுகாப்பு காரணக்களுக்காக ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு கேதார்நாத் கோயிலை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடங்கிவைத்தார். முன்னதாக, தலைமை அர்ச்சகரால் மத சடங்குகள் நடத்தப்பட்டன. கோயிலில் பலவித வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் திறப்பு விழாவின்போது ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்கள் மீது பூக்கள் தூவப்பட்டன.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையில் கேதார்நாத் கோயில் நேற்று நடை திறக்கப்பட்டு காலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து