முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை விடுமுறை எதிரொலி: ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு

சனிக்கிழமை, 3 மே 2025      தமிழகம்
Omni-Bus

Source: provided

சென்னை : கோடை விடுமுறை எதிரொலியால் ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் உயர்ந்துள்ளது.

பொதுவாக பயணிகளின் முதல் பயணத் தேர்வாக இருப்பது ரெயில் பயணம் தான். ஆனால் அதற்கு 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்யாவிட்டால் இடம் கிடைக்காது என்பதால் இறுதி கட்டத்தில் பயணம் செய்பவர்கள் அரசு பஸ்களை நாடுகின்றனர். அதிலும் இடம் கிடைக்காதவர்கள் கடைசி பயணமாக தனியார் ஆம்னி பஸ்களை பயன்படுத்துகின்றனர். தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் செல்லத் தொடங்கியுள்ளனர். ரெயில் மற்றும் அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள், ஆம்னி பஸ்களை தேர்ந்து எடுத்து வருகிறார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) சென்னையில் இருந்து நாகர்கோவில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு செல்வதற்கு ஆம்னி பஸ்களில் ரூ.200 முதல் ரூ.500 வரை கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அதே போன்று, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கண்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வர ரூ.500 முதல் ரூ.700 வரை கட்டணங்கள் கூடுதலாக வசூலிக்கப்படுவதை இணையதளத்தில் பார்க்க முடிகிறது. இதுபோன்ற திடீர் கட்டண உயர்வை கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து