முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தளவுக்கு வளரும் என்று நினைக்கவில்லை: ஐ.பி.எல். குறித்து கோலி ஆச்சர்யம்

சனிக்கிழமை, 3 மே 2025      விளையாட்டு
Virat-Kohli 2023 07-22

Source: provided

பெங்களூரு : ஐ.பி.எல். தொடரின் வளர்ச்சி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி பேசியுள்ளார்.

18-வது சீசன்... 

ஐ.பி.எல். தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இதுவரை 17 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரின் அறிமுகம் குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி மனம் திறந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

எதிர்பாராத விஷயங்கள்... 

இது தொடர்பாக  அவர் பேசியதாவது: ஐ.பி.எல். தொடர் அறிமுகமான ஆண்டு மிகவும் உற்சாகமாக இருந்தது. நிறைய எதிர்பாராத விஷயங்கள் நடந்தன. அப்போது நாங்கள் அதிகம் டி20 போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

உணர்ச்சிகரமான தருணமாக... 

ஐ.பி.எல். ஏலம் நடைபெற்றபோது, நாங்கள் மலேசியாவில் இருந்தோம். நாங்கள் முதல் தர கிரிக்கெட்டர்கள் வரிசையில் ரூ.20 லட்சத்துக்கான ஏலத்தில் இடம்பெற்றோம். எங்களுக்கு 20 லட்சம் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தோம். மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக அது இருந்தது. ஏனெனில், கோலாகலமான தொடக்க விழா, மிகப் பெரிய கிரிக்கெட் வீரர்களுடன் சந்திப்பு என மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தோம்.

நீண்ட பயணம்...

ஐ.பி.எல். பயணம் மிகவும் நீண்ட பயணமாக இருந்துள்ளது. நாங்கள் இளம் வீரர்களாக ஐ.பி.எல். தொடரில் இணைந்தோம். சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து விளையாடினோம். இளம் வீரர்களாக அறிமுகமான நாங்கள் அனுபவம் வாய்ந்த வீரர்களாக வளர்ந்தோம்.

நினைக்கவில்லை...

நேர்மையாக கூறவேண்டுமென்றால், ஐ.பி.எல். தொடர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்த அளவுக்கு ஐ.பி.எல். வளர்ச்சியடையும் என ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால், ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசனில் இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் உற்சாகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஐ.பி.எல். தொடருக்கான ஏற்பாடுகள், நடத்தப்படும் விதம், அணிகளுக்கு இடையேயான கடும் போட்டி இந்த தொடரை மிகவும் விரும்பத்தக்கதாக மாற்றியுள்ளது என்றார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து