எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜம்மு காஷ்மீரில் தற்போதைய நிலைமை சீரானவுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயின்று வரும் 52 தமிழக மாணவர்களை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் உதவி எண்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்.22-ம் தேதியன்று, ஜம்மு காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றது.
இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழகத்தைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக அவர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் உதவி மையம் தொடங்கப்பட்டு, 011-24193300 (Landline), 9289516712 (Mobile Number with Whatsapp) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் அமைக்கப்பட்டு, அவர்களின் தேவைகள் அறிந்து உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், தற்போது, தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் படித்துவரும் தமிழகத்தைச் சார்ந்த 52 மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை பாதுகாப்பாக தமிழகத்துக்கு அழைத்துவர வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இந்த வேண்டுகோளுக்கு இனங்க, முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், ஆகியோர் அம்மாநில நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து பேசி, தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தற்போது விமான சேவைகள் முற்றிலும் முடக்கி வைக்கப்பட்டுள்ள காரணத்தினாலும், அவர்களை சாலை வழியாக பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான சூழ்நிலை இல்லாத காரணத்தினாலும், தற்போதைய நிலைமை சீரானவுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயின்று வரும் 52 தமிழக மாணவர்களை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கல்வி சுற்றுலா சென்ற நான்கு மாணவர்கள் மட்டும் சாலை வழியாக புது டெல்லிக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று (மே 9) இரவு 7.30 மணியளவில் புது டெல்லி தமிழ்நாடு இல்லம் வந்து சேர்வார்கள் என்றும், பின்னர் அவர்கள் இன்று (மே 10ம் தேதி) அன்று அதிகாலை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்படுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் மேற்கு எல்லைப்பகுதிகளில் உள்ள தமிழர்களுக்கு தேவையான தகவல்கள், உதவி, மீட்பு மற்றும் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24/7 உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புது தில்லி தமிழ்நாடு இல்ல உதவி எண்களிலும், மேலும், பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், தமிழக அரசின் 24/7 உதவி எண்களான, 1800 309 3793 (இந்தியாவிற்குள் ), +91 80 6900 9900 (வெளிநாடு), + 91 80 6900 9901 (தொடர்புக்கு) தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்பு
12 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெண்களுக்காக வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை
12 Jan 2026சென்னை, நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மர்மநபர்களால் ஒருவர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Jan 2026சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில் ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொ
-
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா...? டாக்டர் ராமதாஸ் பதில்
12 Jan 2026சென்னை, சென்னையில் பா.ம.க.
-
45 சவரன் நகையைக் கண்டெடுத்து ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு ரூ. 1 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
12 Jan 2026சென்னை, தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
-
மத்திய அரசை கண்டித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டம்
12 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினார்.
-
பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
12 Jan 2026மதுரை, பாலமேட்டில் வருகிற 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளது.
-
போராட்டத்தின் போது கைதான ஆசிரியர்களை உடனே விடுவிக்க அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Jan 2026சென்னை, போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், ராகுல் முடிவு செய்வார்கள்: செல்வப்பெருந்தகை
12 Jan 2026சென்னை, ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை ஆட்சியில் பங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் க
-
பாதையைவிட்டு விலகியது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இஸ்ரோ தலைவர் தகவல்
12 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அறிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஜனநாயகன் சென்சார் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் படக்குழு அப்பீல்
12 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


