முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாட்னா: பிறந்த குழந்தைக்கு சிந்தூர் என பெயர் சூட்டிய பெற்றோர்கள்

வெள்ளிக்கிழமை, 9 மே 2025      இந்தியா
India -2025-05-09

Source: provided

பாட்னா : இந்தியா, பாகிஸ்தான் போரின் போது பிறந்த குழந்தைக்கு சிந்தூர் என பெயர் சூட்டப்பட்டது.

பஹல்காம் தாக்குலுக்கு பழிதீர்க்க பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் உள்ளிட்ட 9 இடங்களை குறிவைத்து இந்திய ராணுவம் சரமாரி தாக்குதல் நடத்தியது. 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த அதிதீவிர துல்லிய தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில் பீகார் மாநிலம் கதிகாரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ராக்கி குமாரி என்ற பெண், பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்திய ராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கையான 'ஆபரேஷன் சிந்தூர்'ரின்போது அந்த குழந்தை பிறந்ததால் குழந்தைக்கு சிந்தூர் என பெற்றோர் பெயரிட்டுள்ளனர்.

பஹல்காமில் கணவர்களை இழந்த பெண்களின் துயரை நீக்கும் வகையில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நன்னாளை நினைவுகூறும் வகையில் எங்களுடைய பெண்ணுக்கு சிந்தூர் என பெயரிட்டுள்ளோம். சிந்தூர் என்ற பெயர் தேசபக்தி உணர்வு மற்றும் உணர்ச்சி ஒற்றுமை இரண்டையும் பிரதிபலிக்கிறது. இது தேசத்திற்கு நாம் செலுத்தும் மரியாதை. எனது மகளும் நாட்டிற்கு சேவை செய்வாள் என குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் கூறினர். இதைபோல முசாபர்பூர் மாவட்டத்தில் பிறந்த 12 குழந்தைகளுக்கு 'சிந்தூர்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து