முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் எரிபொருட்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது: நிறுவனங்கள் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 9 மே 2025      இந்தியா
Petrol-Diesel 2024-10-30

புதுடெல்லி, பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. ஆகிய எரிபொருட்களை வாங்குவதில் பீதி அடையத் தேவையில்லை என்றும் நாடு முழுவதும் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியன் ஆயில் நிறுவனம் நாடு முழுவதும் போதுமான எரிபொருள் இருப்புகளைக் கொண்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி. போதுமான அளவு கிடைப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். எங்கள் விநியோகச் சங்கிலிகள் சீராக இயங்குகின்றன. மேலும் எரிபொருள் மற்றும் எல்.பி.ஜி. அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் எளிதாகக் கிடைக்கின்றன.

பீதியுடன் வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அமைதியாக இருப்பதன் மூலமும், தேவையற்ற கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதன் மூலமும், விநியோகச் சங்கிலியைத் தடையின்றிப் பராமரிக்க முடியும், அனைவருக்கும் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். உங்கள் ஒத்துழைப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் தீவிரமடைந்து வருவதால், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சம் தேவையற்றது என்பதை தெரிவிக்கும் நோக்கில் இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதேபோல், பாரத் பெட்ரோலியம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாடு தழுவிய எங்கள் நெட்வொர்க்கில் பெட்ரோல், டீசல், சி.என்.ஜி. மற்றும் எல்.பி.ஜி. போதுமான அளவு இருப்பு இருப்பதாக பி.பி.சி.எல்.  அனைத்து குடிமக்களுக்கும் உறுதியளிக்கிறது. கவலைப்படவோ அல்லது பீதி அடையவோ எந்தக் காரணமும் இல்லை. எங்கள் விநியோகச் சங்கிலி செயல்பாடுகள் வலுவாகவும் திறமையாகவும் இருப்பதாலும் தடையற்ற விநியோகங்களை உறுதி செய்து வருவதாலும் அனைத்து வாடிக்கையாளர்களும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து