முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா பதிலடியில் பாக்., ராணுவ தளங்கள் சேதம்

வெள்ளிக்கிழமை, 9 மே 2025      இந்தியா
India-Pakistan-War

புதுடில்லி, இந்தியா அளித்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள், முகாம்கள் சேதமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பதில் தாக்குதல் நடத்தப்போவதாக கூறி பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் ஏவுகணை, டுரோன்களை வீசியதால் பதற்றம் அதிகரித்து உள்ளது. இதனை இந்திய ராணுவம் உடனடியாக தாக்கி அழித்தது. மேலும், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கி வருகிறது. இதற்கும் இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மற்றும் சம்பா பகுதிக்கு எதிராக உள்ளபாகிஸ்தான் முகாம்கள், இந்திய ராணுவத்தின் தாக்குதலில் சேதம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல், உரி, பூஞ்ச், நவ்சேரா, ஆர்எஸ் புரா பகுதி அருகே அமைந்துள்ள பாகிஸ்தான் ராணுவ தளங்களும் இந்தியாவின் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள வெடிபொருட்கள் மற்றும் ஆயுத கிடங்குகளும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து