முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் தாக்குதலில் எல்லையில் இதுவரை 22 போ் பலி

சனிக்கிழமை, 10 மே 2025      உலகம்
Gangotri-helicopter-crash-2

Source: provided

பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினா் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் மோட்டாா் குண்டுகள் மூலம் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 22 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பழிதீா்க்க, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடத்தியது. 

இதனிடையே, வடக்கு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டாரில் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் குண்டுவீச்சில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, பூஞ்ச் மாவட்டங்களில் இருவா் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா். குண்டுவீச்சில் அங்கிருந்த பல வீடுகள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் சேதமடைந்தன. வெள்ளிக்கிழமை இரவு இந்தியாவின் எல்லைப்புற நகரங்களாக ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தினர். ஜம்மு அருகே பாகிஸ்தான் நிலைகள், பயங்கரவாத ஏவுதளங்கள் அழிப்பு

இதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானின் ஏவுகணைகளை நடுவானிலேயே அழித்தனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாகிஸ்தானின் முக்கிய தளமான ராவல்பிண்டி “நூர் கான்” விமானப்படை தளம், சக்வால் நகரில் உள்ள முரிட் விமானத் தளம் மற்றும் பஞ்சாப் மாகாணத்தின் ஜாங் மாவட்டத்தில் உள்ள ரஃபிகி விமானத் தளம் என மூன்று விமானப்படை தளங்களையும் இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. 

அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை அதிகாலை சர்வதேச எல்லை மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் 26 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய உடனேயே இந்தியா பதிலடித் தாக்குதல்களை நடத்தி ஒவ்வொரு தாக்குதலையும் வெற்றிகரமாக முறியடித்தது. கட்டுப்பாட்டுக் கோட்டின் பல இடங்களில் இடைவிடாத துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி பகுதியில் சனிக்கிழமை காலை பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் மாவட்ட வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் எஸ்.ராஜ்குமார் தப்பா பலியானர். அவரது வீடு சேதமடைந்தன. இந்நிலையில், பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினா் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் மோட்டாா் குண்டுகள் மூலம் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 22 பேர் பலியானதாக பாதுகாப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து