முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துருக்கி, அஜர்பைஜானை முழுமையாக புறக்கணிக்க இந்திய வர்த்தகர்கள் முடிவு

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      இந்தியா
INDIA

Source: provided

புதுடில்லி : பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து இந்திய வர்த்தகர்கள் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான நம் ராணுவத்தின், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை துருக்கி அளித்தது அம்பலமாகி உள்ளது.பாக்., ராணுவம் நம் மீது ஏவிய ட்ரோன்களில், துருக்கி நாட்டின், 'அசிஸ்கார்டு சோங்கர்' வகை ட்ரோன்கள் இருந்ததை, நம் ராணுவ கர்னல் சோபியா குரேஷி உறுதிபடுத்தினார்.

 இந்நிலையில் நேற்று (மே 16) பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து இந்திய வர்த்தகர்கள் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். நேற்று, 24க்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த வணிகத் தலைவர்கள் டில்லியில் கூடி இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவை எடுத்தனர்.

இது குறித்து, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:துருக்கி மற்றும் அஜர்பைஜானுடனான அனைத்து வர்த்தகத்தையும், முடிவுக்குக் கொண்டுவர  வர்த்தக கூட்டமைப்பின் தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்தவொரு இறக்குமதி மற்றும் ஏற்றுமதியும் நடக்காது. இந்திய திரைப்படத் துறையும் துருக்கி மற்றும் அஜர்பைஜானில் தங்கள் படங்களைப் படமாக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

நாடு முழுவதும் 40,000க்கும் மேற்பட்ட வர்த்தக சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் முடிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. துருக்கி, அஜர்பைஜான் நாட்டிற்கு வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து