முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 24-ல் டெல்லி பயணம்

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      தமிழகம்
CM-1 2024-09-01

Source: provided

சென்னை : நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வரும் 24-ம் ததேி முதல்வர்  மு.க.ஸ்டாலின் மத்திய அரசு அழைப்பை ஏற்று டெல்லி செல்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்தின் அழகை கண்டுகளிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சி ஆண்டுந்தோறும் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு 127-வது மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. 5 நாள் சுற்றுப்பயணமாக உதகை சென்றுள்ள முதல்வர்  மு.க.ஸ்டாலின் மலர் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ரூ.24 லட்சத்து 60 ஆயிரம் செலவில் பெரணி இல்லம் புதுப்பிக்கப்பட்டது. இந்த இல்லத்தையும் முதல்வர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர், படுகர் இன பழங்குடியின மக்கள், திபெத்தியர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தார். இந்த நிலையில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் மே 24-ம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து