முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களின் மொழித்திறன்களை மேம்படுத்த 'லெவல் அப்' திட்டம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சனிக்கிழமை, 17 மே 2025      தமிழகம்
School-Education 2022 02 11

சென்னை, மாணவர்களின் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகியவற்றின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு  மாணவர்களின் அடிப்படை திறன்களில் முன்னேற்றம் காணப்பட்டபோதிலும், தேசிய அளவில் நடைபெறும் என்.ஏ.எஸ்., ஏ.சி.ஈ.ஆர், போன்ற திறன் அளவீட்டு ஆய்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்புக்கேற்ற மொழித் திறன்கனை அடைவதில் குறைபாடு கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டப்படுகிறது.

மாணவர்களின் மொழித் திறன்களை மேம்படுத்தும் ஒரு புதிய முன்னெடுப்பாக "லெவல் அப் " என்ற தன்னார்வ திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கமானது, அரசுப் பள்ளிகளில்  மாணவர்களின்  அடிப்படைத் திறன்களை மாணவர்கள் எளிதாக கற்றுக் கொள்ளும் வனகயில் ஏற்கனவே ஆசிரியர்களால் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிற செயல்பாடுகளை கொண்ட "மொழி வள வங்கி" ஒன்றை  உருவாக்குவதாகும்.

மாவட்டம் தோறும் (மாவட்டத்திற்கு நான்கு அல்லது ஐந்து ஆசிரியர்கள் வீதம்) தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் லெவல் அப் வாட்ஸ் அப்  குழுவில் இனணக்கப்பட்டுள்ளனர்.  மாணவர்களின் ஆங்கில அடிப்பனைத் திறன்கள் மேம்படுத்துவது குறித்தும், சிறப்பாக தங்களது திறன்வளர் நுட்பங்களை கையாளும் ஆசிரியர்களின் அனுபவங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.  

மேலும், புலனக்குழுவில் ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் வழிமுறைகள் தொடர்பான பதிவுகளை பகிரும் வகையில் அப்புலனாய்க்குழுவானது அமைக்கப்படும்.. ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் நேரடி கண்காணிப்பில், பள்ளிகளில் லெவல் அப்  என்ற தன்னார்வ திட்ட செயலாக்கத்தினால் மாணவர்கள் பெற்ற அடிப்படை ஆங்கில மொழித்திறன் அடைவு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து