முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வருடம் ஆர்.சி.பி. ஒரு புதிய அணியாக விளையாடுகிறது: ரெய்னா

சனிக்கிழமை, 17 மே 2025      விளையாட்டு
CSK 2024-04-15

Source: provided

சென்னை : இந்த வருடம் ஆர்.சி.பி. ஒரு புதிய அணியாக விளையாடுகிறது என்று முன்னாள் சி.எஸ்.கே. வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் மோதலினால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். 2025 சீசன் மீண்டும் நேற்று முதல் (மே.17) தொடங்கியது. போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் முக்கியமான கடத்தினை அடைந்துள்ளது.

புதிய அணியாக... 

இந்நிலையில்  முன்னாள் சி.எஸ்.கே. வீரர் சுரேஷ் ரெய்னா பேசியது கவனம் ஈர்த்துள்ளது.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு குறித்தும் ஐ.பி.எல். கோப்பையின் வெற்றி குறித்தும் ரெய்னா கூறியதாவது: இந்த வருடம் ஆர்.சி.பி. ஒரு புதிய அணியாக விளையாடுகிறது. இந்த சீசனில் 150, 136 ரன்களை கூட கட்டுப்படுத்தியுள்ளனர். புதிய கேப்டன் ரஜத் படிதார் சி.எஸ்.கே.வை இருமுறை தோற்கடித்துள்ளார். ஆர்.சி.பி.ன் ஓய்வறை உற்சாகமாக உள்ளது. இது விராட் கோலிக்கான வெற்றி ஆண்டாக இருக்கலாம். 

ஆவலுடன்...

ஒரு கோப்பையை வென்ற பிறகு, கேப்டனாக ஒரு வீரரின் மதிப்பும், அவரது முடிவுகளுக்கும் கிடைக்கும் ஆதரவும் மாறுகிறது. அதனால்தான் ஐ.பி.எல். வெற்றி மிக முக்கியம் எனக் கூறினார்.  17 ஆண்டுகளாக ஆர்.சி.பி. கோப்பை வெல்லாமல் இருக்கிறது. அதனால் இந்த சீசனை அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து