முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வணிகவரித்துறைக்கு 23 புதிய வாகனங்கள் அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 19 மே 2025      தமிழகம்
Minister-3-2025-05-19

சென்னை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்  பி.மூர்த்தி தலைமையில் சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக அமைச்சர் வணிகவரித்துறையில் ரூ.2.02 கோடி செலவில் புதிதாக வாங்கப்பட்ட 23 வாகனங்களை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார். கூட்டத்தில் பேசிய அமைச்சர் கடந்த நிதி ஆண்டில் வரி வருவாய் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக செயல்பட்ட ஆணையர் மற்றும் அனைத்து உயர் அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து, நடப்பு நிதி ஆண்டிலும் அதே முனைப்புடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு அரசு நிர்ணயித்துள்ள வருவாய் இலக்கினை அடைவதற்கு அனைத்து இணை ஆணையர்களும் சிறந்த முறையில் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்கள்.  

இக்கூட்டத்தில் வணிகவரித்துறை ஆணையர் ஜகந்நாதன்,  இணை ஆணையர் (நிர்வாகம்) பூங்கொடி, மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து