முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சியில் 3,000-வது குடமுழுக்கு திருப்புகழூரில் நடைபெறும்: சேகர்பாபு

திங்கட்கிழமை, 19 மே 2025      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

Source: provided

 சென்னை : தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் 3,000-வது குடமுழுக்கு நாகை மாவட்டம் திருப்புகழூரில் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோவிலில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று (திங்கள் கிழமை) தொடக்கிவைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

'தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று இதுவரை 2,956 கோவில்களில் குடமுழுக்கு நடந்திருக்கிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தொடர்ச்சியாக குடமுழுக்கு நடத்தப்பட்டு வருகிறது. நாகை மாவட்டம் திருப்புகழூரில் ஜூன் 5-ம் தேதி 3,000-வது குடமுழுக்கு நடைபெற உள்ளது. திருக்கோவில் இடங்களை அளவிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 7,560 ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளோம். இதன் மதிப்பு 7,671.23 கோடி. மாநில வல்லுநர் குழுவில் இதுவரை 12,104 கோவில்களுக்கு அனுமதி அளித்திருக்கிறோம்' என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து