முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தான்களின் ஆட்சிக்கு சாத்தான்குளம் சம்பவமே சாட்சி: சேகர்பாபு

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      தமிழகம்
Sekarbabu-2023 04 06

Source: provided

சென்னை : சாத்தான்களின் ஆட்சிக்கு சாத்தான்குளம் சம்பவமே சாட்சி என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

"உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி" என்று அரக்கோண சம்பவத்தை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, ஏற்கனவே துப்புக்கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடி சாட்சி என்றும் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று நாங்கள் சொல்லியிருக்கிறோம் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ஆட்சியை பொறுத்தளவில் தவறு நடக்கின்ற பட்சத்தில் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் குற்றம்சாட்ட வேண்டும். தவறு நடப்பதற்கு முன்பு வருமுன் காப்பது என்பது போல் தவறு நடக்காமல் நடவடிக்கை என்பது ஒருபுறம். தவறு நடந்துவிட்ட பிறகு அதன் கடுமையான நடவடிக்கை எடுப்பது என்பது இன்னொருபுறம். இன்னார், இனியவர் என்று எங்களுடைய முதல்வருக்கு பாகுபாடு இல்லை.

தவறு யார் இழைத்து இருந்தாலும் சொந்தக்கட்சிக்காரர் இழைத்து இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் முதல்வருடைய நோக்கம், நிலைப்பாடு. அந்த வகையில், மாநகராட்சியில் 2 மாமன்ற மாநகராட்சி உறுப்பினர்கள், அதிகாரிகளோடு சண்டையிடுவது குறித்து அவருடைய கவனத்திற்கு சென்ற உடன் பதவியில் இருந்தே நீக்கிய ஆட்சி தமிழக முதல்வரின் ஆட்சி. நீதியின் ஆட்சி. சட்டத்தின் ஆட்சி. கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி.. அதற்கு சாட்சி சாத்தான்குளம் சம்பவமே அதற்கு ஒரு சாட்சி என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து