முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் : முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      தமிழகம்
Suicide 2023 04 29

Source: provided

திருப்பூர் : திருப்பூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் வழங்க முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தையில்  முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் சாய ஆலையில் சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 2 பேர் விஷவாயு தாக்கி இறந்தனர். 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருப்பூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் வழங்க சாய ஆலை நிறுவனம் ஒப்பதல் அளித்துள்ளது. வருவாய் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தையில் அந்நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் தனியாருக்கு சொந்தமான சாய  ஆலையில் உள்ள சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய திருப்பூர் சுண்டமேடு பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 31), வேணுகோபால் (30) மற்றும் முத்துக்குமார், ஹரிகிருஷ்ணன், சின்னச்சாமி ஆகிய 5 பேர் சென்றனர். அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொட்டிக்குள் இறங்கியபோது அவர்களை விஷவாயு தாக்கியது. இதில் 5 பேரும் தொட்டிக்குள் மயங்கி விழுந்தனர். இதில் சரவணன், வேணுகோபால் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் மயக்க நிலையில் இருந்த முத்துக்குமார், ஹரிகிருஷ்ணன், சின்னச்சாமி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து