எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று (24ம் தேதி )நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அந்த வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
விமானம் மூலம்....
இந்தநிலையில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 9.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மேள தாளங்களுடன் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கலாநிதி வீராசாமி, ஜெகத்ரட்சகன், திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, உள்ளிட்டோர் சால்வை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வரவேற்றனர்.
பிரதமர் மோடியை...
டெல்லியில் முக்கிய பிரமுகர்களை முதல்வர் மு..ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும்படி முதல்வர்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டம் முடிந்து, இன்றே சென்னை திரும்புகிறார். இதற்கிடையே பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச, முதல்வர் மு.க.ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களை சந்தித்து பேசுவதற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிகிறது.
தமிழகத்துக்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த உள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன். தமிழகத்துக்கான நிதியை போராடி பெறுவேன்.
- முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


