முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதுவரை அரசு கலைக்கல்லூரிகளில் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

சனிக்கிழமை, 24 மே 2025      தமிழகம்
Student 2023-05-25

Source: provided

சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் சேர இதுவரை ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 263 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகள், தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஆர்வமாக உள்ளனர். 176 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 8-ந்தேதி தொடங்கியது. ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில் மாணவ-மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று முன்தினம் வரை ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 263 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  

பட்டப்படிப்புகளில் சேர்ந்து போட்டித் தேர்வு மூலம் அரசு பணியில் சேரலாம் என்ற எதிர்பார்ப்புடன் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். கலைக்கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க வருகிற 27-ந்தேதி கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் www.tngasa.in எனும் இணையதளம் வழியாக வேகமாக விண்ணப்பிக்க வேண்டும். இணைய தள வசதியில்லாதவர்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வளைதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044- 24343106, 24342911 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் விளக்கம் பெறலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து