முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் இலக்கு சாத்தியம்: பிரதமர் நரேந்திரமோடி பேச்சு

சனிக்கிழமை, 24 மே 2025      இந்தியா
Modi-2025-05-24

புதுடெல்லி, மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து டீம் இந்தியாவைப் போல செயல்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல என்று  நிதி ஆயோக் கூட்டத்தில் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக்கின் 10-வது நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “நாம் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மத்திய அரசும், அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து டீம் இந்தியாவைப் போல செயல்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல. ஒவ்வொரு இந்தியனின் இலக்கும் வளர்ச்சியடைந்த பாரதம்தான். ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சியடையும் போது, ​​பாரதம் வளர்ச்சியடைந்தது ஆகும். இதுவே அதன் 140 கோடி மக்களின் விருப்பமாகும் என்று கூறினார்

நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தின் கருப்பொருளாக 'விக்ஸித் (வளர்ச்சியடைந்த) பாரதத்திற்கான விக்ஸித் ராஜ்யம்@2047' இருந்தது. நிதி ஆயோக்கின் உச்ச அமைப்பான இந்த கவுன்சில், அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்களை உள்ளடக்கியது. பிரதமர் மோடி நிதி ஆயோக்கின் தலைவராக உள்ளார்.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் முதல் பெரிய கூட்டம் இதுவாகும். பொதுவாக, நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். கடந்த ஆண்டு, இது ஜூலை 27 அன்று நடைபெற்றது. கவுன்சிலின் முதல் கூட்டம் பிப்ரவரி 8, 2015 அன்று நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து