முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டையில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம்: ரூ. 3.50 கோடி ஒதுக்கீடு: துணை முதல்வர் தகவல்

சனிக்கிழமை, 24 மே 2025      தமிழகம்
DCM-1-2025-05-24

Source: provided

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று  புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு உள்விளையாட்டரங்கத்தை அரசு உயர் அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவிகளுடன் அவர்கள் மேற்கொண்டு வரும் விளையாட்டு பயிற்சி குறித்தும், பெற்றுள்ள பதக்கங்கள் குறித்தும் கலந்துரையாடி கேட்டறிந்து, அவர்கள் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளாகவும், சர்வதேச அளவிலும் பதக்கங்கள் வெல்வதற்கும் வாழ்த்துகள் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மகளிர் விளையாட்டு விடுதி மாணவிகள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தடகளத்தில் 2 வெள்ளி, 1 வெண்கலம் மற்றும் வளைகோல் பந்து விளையாட்டில் 3 வெள்ளி, 1 வெண்கலமும் வென்று சாதனனை படைத்துள்ளனர். மேலும் முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம், 3 வெள்ளி 8 வெண்கலமும் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆய்விற்கு பின் செய்தியார்களுக்கு தமிழ்நாடு துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அனைவரும் சேர்ந்து இன்றைக்கு காலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற அரசினுடைய அனைத்து பணிகளின் சார்பாக சென்ற ஆண்டு ஒரு விரிவான ஆய்வு வைத்திருந்தோம்.  முதல்வரின் உத்தரவின் பேரில் இன்றைக்கு ஒரு கலந்துரையாடல் நடத்தியிருக்கின்றோம். சில பணிகளில் சுணக்கங்கள் இருப்பதனால், எதனால் சுணக்கம் என்று கேட்டு, அந்த பணிகள் எல்லாம் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றோம். நேற்று அந்த ஆய்வு பணிகளை முடித்துவிட்டு, அன்றைக்கு புதுக்கோட்டையில் 2015-ம் ஆண்டு இந்த விளையாட்டு அறங்கம் கட்ட ஆரம்பித்தார்கள். அதன் பின்பு நிதி நெருக்கடி காரணமாக அப்படியே கைவிட்டார்கள். இது தொடர்ந்து யாராலும் பயன்படுத்த முடியாத ஒரு சூழலில் இருந்தது. இதற்கு மேலும் ஒரு 4.50 கோடி ரூபாய் தேவைப்படும் என்று அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது சொன்னார்கள்.

முதல்வர் என்னை அழைத்து உடனே என்னவென்று பார்த்து, உடனே அந்த பணிகளை எல்லாம் ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னதுடன், உடனடியாக முதல்வர்3.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தந்துள்ளார்கள். மீதம் இருக்கும் ஒரு கோடிக்கு இங்கு இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் எல்லாம் அவர்களின் பங்கினை தருவதாக சொல்லியிருக்கின்றார்கள். எனவே, விரைவில் அந்த பணிகள் துவங்க இருக்கின்றது. வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் எல்லாம் முடித்து வைக்கப்பட்டு, விளையாட்டு வீரர்கள் பயன்பெறுகின்ற அளவில்  விளையாட்டு வீரர்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகின்றோம்.  வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு செயல்படத் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து