முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகஸ்ட் 29 அன்று திருமணம் - விஷால் சாய் தன்ஷிகா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      சினிமா
Vishal-Sai-Dhanshika 2025-0

Source: provided

2004 ம் ஆண்டு வெளியான “செல்லமே” படத்தின் மூலம் விஷால் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து “சண்டகோழி”, “திமிரு”, “தாமிரபரணி” என பல படங்களில் கதாநாயகனாக நடித்து அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து “விஷால் ஃபிலிம் பேக்டரி” என்னும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அதன்மூலம் பல வெற்றிப் படங்களை தயாரித்தார். மேலும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றி உள்ளார். திரைப்படங்களை தாண்டி, அவரது தனிப்பட்ட வாழ்க்கை அதிலும் குறிப்பாக அவரது திருமணம் குறித்து அவ்வப்போது தமிழ் சினிமா வட்டாரங்களில் பல்வேறு வதந்திகள் வெளியாகி ரசிகர்களிடையே பல குழப்பங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் தன்னுடைய திருமணம் குறித்து சமீபத்தில் பேசிய விஷால், “நடிகர் சங்க கட்டடம் திறக்கப்பட்ட பிறகுதான் எனது திருமணம் நடைபெறும் என அறிவித்திருந்தார். இதனிடையே வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி நடிகர் சங்க கட்டடம் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் சாய் தன்ஷிகாவின் ஆக்ஷன் படமான யோகி டா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் பங்கேற்று திருமண அறிவிப்பை பகிர்ந்துள்ளார். இதன்படி ஆகஸ்ட் 29ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து