முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 18-ல் ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ்

சனிக்கிழமை, 24 மே 2025      விளையாட்டு
Hockey 2023 04 17

Source: provided

முதலாவது ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பை தொடர் சென்னையில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடர் ஜூன் 18-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 40-வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் மற்றும் 35-வயதுக்கு மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். போட்டிகள் பங்கேற்கும் அணிகளுக்கு ஏற்ப, லீக், நாக் அவுட்  முறையில் நடத்தப்பட உள்ளது. அணிகளின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.

இது குறித்து இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் அசுந்தா லக்ரா கூறுகையில், "முதல் முறையாக நடைபெறும் ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பையில் பங்கேற்பது எனக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான மற்றும் உற்சாகமான தருணம். ஹாக்கி நான் யார் என்பதை வடிவமைத்துள்ளது. என்னுடன் விளையாடிய சக நட்சத்திரங்களுடன் மீண்டும் களம் காண உள்ளது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது" என்று கூறினார்.

_________________________________________________________________________________________________________________________

பேட்மிண்டன்: இறுதியில் ஸ்ரீகாந்த்

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில்  நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் யூஷி தனாகாவுடன் மோதினார் . இந்த போட்டியில் ஸ்ரீகாந்த் 21-18, 24-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

இதன் மூலம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு BWF தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய பேட்மிண்டன் வீரர் என்ற சாதனையை கிடாம்பி ஸ்ரீகாந்த் படைத்துள்ளார். 32 வயதான ஸ்ரீகாந்த், 2021 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

_________________________________________________________________________________________________________________________

இந்திய அணியில்  கருண் நாயர்

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அடுத்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு அணியை வழிநடத்தக்கூடிய கேப்டனை அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். மேலும் துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு, கருண் நாயர் இடம் பிடித்துள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் கடைசியாக 2017-ம் ஆண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியிருந்தார். டெஸ்ட்டில் 6 போட்டிகளில் விளையாடி 374 ரன்கள் குவித்துள்ளார். இவரின் அதிகபட்ச ஸ்கோர் 303 ரன்கள் ஆகும். இதனை இங்கிலாந்து எதிராக அவர் அடித்தது குறிப்பிடத்தக்கது.

_________________________________________________________________________________________________________________________

அதிக பவுண்டரிகள்: கோலி சாதனை

ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. இதில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

சின்னசாமி மைதானம் அல்லாத மற்ற மைதானங்களில் நடந்த போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த பெங்களூரு அணியை முதல்முறையாக ஐதராபாத் அணி தோற்கடித்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு பெங்களூரு அணி சரிந்துள்ளது இப்போட்டியில் விராட் கோலி 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 43 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 800 பவுண்டரிகளை விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ஆர்.சி.பி. வீரர் விராட் கோலி படைத்தார். 

_________________________________________________________________________________________________________________________

நபோலி அணி சாம்பியன்

இத்தாலியில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் தொடர் சீரி ஏ.  இதில் இன்டர் மிலன், ஏ.சி. மிலன் , நபோலி, யுவென்டஸ் உள்ளிட்ட 20 முன்னணி கிளப் அணிகள் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். 38 போட்டிகளில் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி சீரி ஏ டைட்டிலை டைட்டிலை வெல்லும்.

2024-25 சீசனின் 38-ஆவது போட்டியில் நபோலி நேற்று காக்லியாரி அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 2-0 என நபோலி வெற்றி பெற்றது . இதனால் 38 போட்டிகளில் 24 வெற்றி, 10 டிரா, 4 தோல்விகள் மூலம் 82 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து நபோலி அணி கோப்பையை வென்றது. இன்டர் மிலன் 38 போட்டிகளில் 24 வெற்றி,9 டிரா, 5 தோல்விகள் 81 புள்ளிகள் பெற்றது குறிப்பிடத்தக்கது .

_________________________________________________________________________________________________________________________

டென்னிஸ்: பைனலில் ரூப்லெவ்  

ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது . இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடினார் . இதனால் ரூப்லெவ் 6-1,6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் . இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் பிளாவியோ கோபோலியை, ரூப்லெவ் எதிர்கொள்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து