முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ்மாக் வழக்கில் வாய் திறந்த தயாநிதி மற்ற வழக்குகளுக்கு வாய் மூடியது ஏன்? ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

சனிக்கிழமை, 24 மே 2025      அரசியல்
RBUdhayakumar 2024-12-22

சென்னை, டாஸ்மாக் வழக்கில் இடைக்கால தடைக்கு வாய் திறந்தவர், மற்ற வழக்குகளில் வாயை மூடிக்கொண்டது ஏன் என்று தயாநிதி மாறனுக்கு மாஜி அமைச்சர் அர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து  எதிர்க்கட்சித்துணைத்தலைவரும் அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்ட அறிக்கை வருமாறு தி.மு.க-வின் விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் . தயாநிதி மாறன், தமிழக விளையாட்டுத் துறைமந்திரியைப் போலவே விளையாட்டுத்தனமாக உளறல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.திமுக-விற்காக உழைத்த உண்மையான தொண்டர்கள் சந்தித்த எந்தவிதமான சிரமத்தையும் அனுபவிக்காமல் -உதாரணமாக, கொடி பிடிக்காமல், போஸ்டர் ஒட்டாமல், உண்ணாவிரதம் இருக்காமல், காவலர்களிடம் தடியடி படாமல், சிறை செல்லாமல்,தேர்தல் வேலை பார்க்காமல்,. முரசொலி மாறன்  மகனாக பிறந்தஒரே காரணத்திற்காக நேரடியாக எம்.பி-ஆகவும், உடனே மத்திய அமைச்சராகவும்பதவி சுகத்தை அனுபவித்த. தயாநிதி மாறன், இந்திய தொலைத் தொடர்பு நிறுவனத்தையே முடக்கிய பெருமை\கொண்டவர், இத்தனை நாட்கள் இருந்த இடம் தெரியாமல் இருந்துவிட்டு, உச்சநீதிமன்றம் டாஸ்மாக் வழக்கிற்கு அளித்தஇடைக்காலத் தடையில், தேவையில்லாமல்  அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை  தொடர்புபடுத்தி அறிக்கை வெளியிட்டு,தனது இருப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

உங்களது தந்தை . முரசொலி மாறன் அப்போதைய மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசில், இந்தியவரலாற்றிலேயே இல்லாத வகையில் உடல் நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சுமார்ஓராண்டு காலம் இலாகா இல்லாத மந்திரியாக பதவி வகித்தபோது, அப்போது பாஜக-வை வானுயுர புகழ்ந்ததைமறந்துவிட்டீர்களா? இன்று திமுக அரசின் ஊழல்கள் மத்திய புலனாய்வுத் துறை மூலம் கண்டறியப்பட்டதைஏற்றுக்கொள்ள முடியாமல், அருவருக்கத்தக்க அவதூறு செய்திகளை வெளியிட்டுள்ளீர்கள்.\இதே சென்னை உயர்நீதிமன்றம், மத்திய அமலாக்கத் துறை `திமுக-வினர் டாஸ்மாக் மூலம் செய்த முறைகேடுகளைவிசாரிக்கலாம்’ என்று தீர்ப்பளித்தபோது, சப்பை கட்டு அறிக்கை வெளியிட்ட தயாநிதி மாறன் அப்போது எங்கேபோனார்? பம்மிக் கிடந்தவர்கள் யார்? முன்னாள் டாஸ்மாக் மந்திரி செந்தில் பாலாஜி வழக்கு, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கு, பல பாலியல்குற்ற வழக்குகள், போதைப் பொருள் நடமாட்ட வழக்குகள் போன்றபல வழக்குகளில் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும்,  திமுக அரசுக்கு குட்டு வைத்ததை வசதியாகமறந்துவிட்டாரா . தயாநிதி மாறன்.தற்போது இந்த ஒரு வழக்கின் இடைக்காலத் தடைக்கு வாயை திறந்துள்ள ‘ஒரிஜினல்’ சூராதி சூரர், சூனா பானாதயாநிதி மாறன், மற்ற வழக்குகளில் வாயை திறக்காதது ஏன்? மதுரையில் உங்களது தினகரன் நாளிதழ் அப்பாவிஊழியர்கள் மூவர் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் வாயைத் திறக்காத நீங்கள், இப்போது வாய் பேசுவதுவிந்தையிலும் விந்தை. அகால மரணமடைந்தவர்களின் ஆன்மா உங்களை மன்னிக்காது.உச்சநீதிமன்றம் டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தற்காலிக தடை வழங்கி உள்ளதற்கே இந்தஆட்டம், பாட்டம் தேவையில்லை. இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது அமலாக்கத் துறைபதில் அளிக்கும்போது உண்மை நிலை வெளிச்சத்திற்கு வரும்.\திமுக அரசு, டாஸ்மாக் விஷயத்தில் செய்த ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும் என்பதை உணர வேண்டும். அப்போது நீங்கள் வெட்கித் தலைகுனியும் நிலையும் வரும் என்பதை உணர வேண்டும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து