முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொத்துவரி உயர்வு பற்றிப் பேச அ.தி.மு.க.வுக்கு அருகதை இல்லை: அமைச்சர் கே.என்.நேரு காட்டம்

சனிக்கிழமை, 24 மே 2025      தமிழகம்
KN-Nehru 2023 04 01

சென்னை, ஆட்சியில் இருந்தபோது கையெழுத்து போட்டுவிட்டு, இன்று சொத்துவரி உயர்வை அ.தி.மு.க. எதிர்க்கிறது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார் 

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஓலைக் குடிசைகள், ஓட்டு வீடுகளுக்குக் கூட பல மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது" என வழக்கம் போலவே பழனிசாமி பொய்களைச் சொல்லியிருக்கிறார். மத்திய பா.ஜ.க. அரசு கைநீட்டிய இடங்களில் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டதன் விளைவால் தான் நாம் மத்திய அரசின் பிடிகளில் சிக்கித் தவிக்கிறோம்.

'சமீபத்திய 5 ஆண்டுகளின் மாநில மொத்த உற்பத்தியைக் கணக்கிட்டு ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் சொத்துவரி வசூலிக்க வேண்டும். அப்படி வசூலித்தால் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்கள் விடுவிக்கப்படும்' என்ற நிபந்தனையை 15-வது நிதிக்குழு விதித்தது.

ஒருவேளை தமிழ்நாடு அரசு இதை கடைப்பிடிக்காத பட்சத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021-26 வரை நமக்குக் கொடுக்கப்பட வேண்டிய மத்திய அரசின் மானியம் ரூ.4,36,361 கோடி நிறுத்தி வைக்கப்படும், அதோடு தூய்மை இந்தியா திட்டம் , அம்ரூட் 2.0 திட்டம் ஆகியவற்றிற்கான நிதியும் ஒதுக்கப்படாது. மோடி அரசு இப்படிக் கடுமையான விதிகளை 15-வது நிதியாணையத்தின் மூலம் விதித்தபோது தங்களுடைய சுயநலத்துக்காக மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டுக் கையெழுத்திட்டவர் தான் அன்றைக்கு ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி. அதனால்தான், ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்வு என்பது நடைமுறைக்கு வந்தது.

எடப்பாடி பழனிசாமி மோடி அரசின் அடிமையாகி கையெழுத்து போட்டதால், 15-வது நிதியாணையம் சொத்து வரி உயர்வைக் கட்டாயமாக்கியது. அதனால், வேறுவழியின்றித் தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.   அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ஆதரித்து கையெழுத்து போட்டுவிட்டு, இப்போது சொத்துவரி உயர்வை எதிர்க்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து