முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் தேர்வு செய்யப்படாதது ஏன்? - பி.சி.சி.ஐ. விளக்கம்

சனிக்கிழமை, 24 மே 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை : டெஸ்ட் அணியில் இருந்து முகமது சமி, ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது குறித்து பி.சி.சி.ஐ. விளக்கமளித்துள்ளது.

எதிர்பார்ப்பு...

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது. 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) சுழற்சியில் இந்தியாவின் முதல் தொடர் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சுப்மன் கில் கேப்டன்...

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. நேற்று அறிவித்தது. இதன்படி இங்கிலாந்து செல்லும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னணி நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலிவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய டெஸ்ட் அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் இல்லை....

இந்திய அணியில் அபிமன்யூ ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ்குமார் ரெட்டி, ஜடேஜா போன்ற வீரர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள். பவுலிங் படையில் பும்ரா, சிராஜ் , பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர். இதேபோன்று முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் ஆர்ஸ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த டெஸ்ட் அணியில் சர்பராஸ்கான், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்ஷித் ராணா மற்றும் முகமது சமி ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

எதிர்காலத்தை கருதி...

இந்நிலையில் கேப்டனாக சுப்மன் கில் தேர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், "நாங்கள் 1-2 சுற்றுப்பயணத்திற்கு கேப்டன்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. நாங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முன்னேற விரும்புகிறோம். கடந்த 2 ஆண்டுகளில் அவரிடம் (கில்) சில முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறோம். இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுவது கடினமாக இருக்கும். ஒருவேளை நாம்  கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும், ஆனால் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், அதனால்தான் நாங்கள் அவரைத் தேர்ந்தெடுக்கிறோம்" என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து