முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் தீர்த்தகிரி கோவிலில் 92 அடி உயர முருகன் சிலை கும்பாபிஷேகம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூன் 2025      ஆன்மிகம்
Murugan 2025-06-08

Source: provided

வேலூர் : வேலூர் தீர்த்தகிரி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள  92 அடி உயர பிரம்மாண்ட முருகன் சிலைக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வேலூர், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடாபுரம் அடுத்த புது வசூர் தீர்த்தகிரி மலையில் பல நூறு ஆண்டு பழமையான வடிவேல் சுப்பிரமணிய சாமி கோவில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு முன்பாக 92 அடி உயரத்தில் மிகப்பிரமாண்ட மான முருகன் சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் ஸ்தபதி இந்த சிலையையும் வடிவமைத்துள்ளார். தென் வடக்கு திசையை பார்த்தவாறு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த முருகன் சிலை மலை உச்சியில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

தற்போது திருப்பணிகள் முடிந்து கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோவிலில் நேற்று இரவு வாண வேடிக்கை மகா அபிஷேகம் அலங்கார தரிசனம் திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் குழுவினரின மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு சாமி வீதி உலா நடைபெற்றது. பிரமாண்ட முருகன் சிலையின் முன்பு குடும்பத்துடன் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து