முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘பரமசிவன் பாத்திமா’ திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      சினிமா
Paramasivan-Fatima 2025-06-

Source: provided

திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு மலை கிராமங்கள் உள்ளது. ஒன்று கிறிஸ்தவர்கள் வாழும் கிராமம். மற்றொன்று இந்துக்கள் வாழும் கிராமம் இந்த இரு கிராமங்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகிறது. இதில் ஒரு இளைஞர் கொல்லப்படுகிறார். இதனை விசாரிக்கும் போலீஸ் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது. கடைசியில் கொலையைச் செய்தது யார்? எதற்காக கொலை நடந்தது என்பதைச் சொல்லும் படமே ‘பரமசிவன் பாத்திமா. கதையின் நாயகனாக விமல் நடிக்க அவருக்கு ஜோடியாக சாயாதேவி நடித்திருக்கிறார். கிறிஸ்தவ பாதரியராக எம்.எஸ்.பாஸ்கர், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன் இருவரும் அதிகம் பேசிப் பேசி பார்வையாளர்களை குழப்புகிறார்கள். எழுதி இயக்கியிருக்கும் இசக்கி கார்வண்ணன், இந்து மதம் தான் உயர்ந்தது, மற்றவை பணம் கொடுத்து மக்களை தங்கள் பக்கம் இழுக்கிறது என்பதாக சொல்லியிருக்கிறார். மொத்தத்தில், எந்த மதமாக இருந்தாலும், அனைவரும் ஒன்று என்ற சிந்தனையோடு வாழ்ந்து வருபவர்களிடம் மத மோதல்களை உருவாக்க முயற்சித்திருக்கும் ஒரு தவறான படமே பரமசிவன் பாத்திமா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து