முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பெண் விடுதிகளில் இனி பெண் காவலர்கள் நியமனம் : அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      தமிழகம்
Geeta-Jivan 2024-11-26

Source: provided

சென்னை : பெண்களுக்கான அரசின் அனைத்து சேவை இல்லங்களிலும் இனி பெண் காவலர்களே நியமிக்கப்படுவர் என சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

சிட்லபாக்கம் அரசு சேவை இல்லத்தில் 13 வயது சிறுமி பாலியல் தொந்தரவுக்கு ஆளானது பற்றி சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள சமூக நல ஆணையரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசுகையில், "சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரக்கூடிய அரசு சேவை இல்லத்தில்  சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஒருவர் ஈடுபட்டுள்ளார் என்கிற செய்தி அறிந்து நாங்கள் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று விசாரித்து பின்னர் அவரது தாயாரை நேரில் சென்று சந்தித்தோம். இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் உரிய புகார் அளிக்கப்பட்டு புகாரின் அதன் அடிப்படையில் தங்கும் விடுதியில் பணிபுரிந்து வரும் காவலாளியை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளார்கள்.

ஆண் காவலர்களுக்கு பதிலாக பெண் காவலர்கள் மூன்று பேர் நியமனம் செய்ய உள்ளோம்.  மேலும் விடுதிக்கென தனியாக சி.சி.டிவி. கேமராக்கள் அமைப்பதற்கான பணிகளையும் மேற்கொள்ள இருக்கிறோம். இனி வரக்கூடிய காலகட்டங்களில் தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்கள் அல்லது தொண்டு நிறுவனங்களின் மூலமாக நடத்தப்படக்கூடிய விடுதிகளில் பெண் காவலர்கள் தொடர்ந்து நியமிக்கப்படுவார்கள். இதுவரையில் 138 பிள்ளைகளிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், வேற எந்த சிறுமியும் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை என தெரிய வந்துள்ளது.  

சிறுவயதிலேயே திருமணம், சிறு வயதிலேயே கருத்தரித்தல் சம்பவங்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக போதிய விழிப்புணர்வு வழங்குவதற்கு துறை ரீதியாக திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து