முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு: அமைச்சர் அறிவிப்பு

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      தமிழகம்
kv-chezhiyan 2025-01-21

Source: provided

 சென்னை : பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அமைச்சர் கூறியதாவது: ஏழை, எளிய மாணாக்கர்கள் கல்வி பயின்று, தகுந்த வேலை வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் பல்வேறு நிலையில் தொழிற்சார் பயிற்சியினை வழங்கி வருகிறது.

ஏப்ரல், 2025-இல் நடைபெற்ற பட்டயத் தேர்வுகளில் இறுதி பருவம் / துணைத் தேர்வினை எழுதிய பாலிடெக்னிக் கல்லூரி மாணாக்கர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் நிலுவை வைத்துள்ளனர். அம்மாணாக்கர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்க ஏதுவாக ஜூன் / ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வின்  மூலம் தேர்ச்சி பெறாமல் உள்ள நிலுவைப் பாடங்களை எழுத வாய்ப்பு வழங்கிட முதல்வர்  அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இம்மாணாக்கர்களுக்கு தற்பொழுது ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இது குறித்த விவரங்கள் அனைத்தும் https://dte.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தின் வாயிலாக மாணாக்கர்கள் அறிந்துகொள்ளலாம். மேலும், ஜூன் / ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு கீழ்குறிப்பிட்டுள்ள கால அட்டவணையின்படி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து