முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பஸ் டிரைவரை செருப்பால் அடித்த உதவி மேலாளர் சஸ்பெண்ட்

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      தமிழகம்
Bus 2024 08 05

Source: provided

மதுரை : மதுரை ஆரப்பாளையம் அருகே அரசு பஸ் டிரைவரை செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பான நிலையில், அச்செயலை செய்த உதவி மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பஸ்ஸை டிரைவர் ஓட்டி வந்தார். நேற்று ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே பஸ்ஸை நிறுத்தி பயணிகளை ஏற்றி வந்தார். பின்னர், ஆரப்பாளையம் பஸ் நிறுத்தத்திற்கு சென்ற பஸ்ஸை வெகுநேரமாகியும் எடுக்காததால், டிரைவரிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது, உதவி மேலாளர் சொன்னால் தான் பஸ்ஸை எடுப்பேன் என்று டிரைவர் கூறியுள்ளார். இதனால், பயணிகள் ஆரப்பாளையம் பஸ் நிறுத்த உதவி மேலாளர் மாரிமுத்துவிடம் சென்று பஸ்ஸை எடுக்குமாறு கூறியுள்ளனர். இதனால் குழம்பிப் போன அவர், பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு, டிரைவரை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, தனக்கு எதிராக பயணிகளை தூண்டி விடுகிறாராயா? என்று கூறி, செருப்பால் அடித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், உதவி மேலாளர் மாரிமுத்து தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து