முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி. தொடருக்கு முன்பாகவே இளம் இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் அறிவுரை தொடங்கியது

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      விளையாட்டு
INDIA 2024-12-04

Source: provided

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இளம் இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

5 போட்டிகள்...

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி, இங்கிலாந்து சென்றடைந்து பயிற்சியை தொடங்கிவிட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது. 

அறிவுரைகள்...

 இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இளம் இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

புஜாரா...

இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்றவாறு இந்திய அணி உடனடியாக தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இங்கிலாந்தில் உள்ள சூழல்களில் விளையாடிய அனுபவத்தின் மூலம், பொறுமை மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது வெற்றிக்கு மிகவும் முக்கியம் என நான் நம்புகிறேன் 

ஆஷிஷ் நெஹ்ரா...

இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வது மிகவும் முக்கியம். இந்திய அணி வீரர்கள் தங்களை ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு உடனடியாக மாற்றிக்கொள்வார்கள் என உறுதியாக கூறமுடியும். நம்மிடம் அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

இர்பான் பதான்...

இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்ப வீரர்கள் எவ்வளவு சீக்கிரம் தங்களை மாற்றிக் கொள்கிறார்களோ, அந்த அளவுக்கு அது அணிக்கு நல்லது. இந்திய அணி பல புதிய வீரர்களுடன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.  ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு சிறப்பாக விளையாடுவதே வெற்றி பெறுவதற்கான வழி.

மைக்கேல் வாகன்...

மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இளம் வீரரான ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமித்தது மிகவும் துணிச்சலான முடிவு. ஷுப்மன் கில் நன்றாக செயல்பட வேண்டிய இடத்தில் இருக்கிறார்.  இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றால், அது அடுத்த தலைமுறைக்கு உந்துசக்தியாக இருக்கும். இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தொடரைக் கைப்பற்றினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து